பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எங்காயினும் வரும் தனி வழி தம்மிடம் உள்ள பொருளை யாசிப்பவர்களுக்கு இடாமல் வைத்துக் கொண்டிருப்பவர்கள் என்ன நினைக்கிறார்கள்? தம்மிட முள்ள பொருள், தங்கம், தாங்கள் கட்டிக்கொண்ட அழகான வீடு - இரண்டு லட்சம் பெறுமான அளவில் கட்டப்பட்டிருக்கும் சிங்கார பங்களா - மனைவி இவைகள் எல்லாம் தங்களுக்கு எப்போதும் துணையென நினைக்கிறார்கள். வங்காரம் - தங்கம்: தெலுங்கில் பங்காரு என்பார்கள். அருணகிரியார் சொல்லுகிறார். "நீங்கள் தனியாகப் பிரயாணம் செய்ய வேண்டிய நெடும்பாதை ஒன்று இருக்கிறதே, மரணத்தின்பின்; உயிர் பிரயாணம் செய்யப் போகிற அந்தத் தனி வழியில் இவை எல்லாம் துணை செய்யுமா? துணை செய்யும் என்று பிறருக்குக் கொடுக்காமல் வைத்துக் கொண்டிருக்கிறீர்களே கெடுபவர்களே! என்று இடித்துச் சொல் கிறார். பொன்னும் வீடும் மடங்தையரும் ஒருவன் தன்னிடம் இருக்கும் பணத்தை எல்லாம் தங்கமாக மாற்றி வைத்துக் கொள்கிறான். தங்கத்தின் மதிப்பு என்றைக்கும் நிலையானது என்று நினைக்கிறான். எப்போதும் அது துணையாக இருக்கும் என்று நினைக்கிறான். பெரிய பங்களா கட்டிக் கொள்கிறான். அதில் எத்தனை அறைகள் இருக்கின்றன தெரியுமா? மாடு கட்டும் கொட்ட கையே மிகப் பெரியதாக, மிக அழகாக இருக்கிறது. சாப்பாட்டுக் கூடம், படுக்கை அறை முதலிய பல அறைகள் சித்திர வேலைப் பாட்டோடு கட்டியிருக்கிறான். இரண்டு லட்சம் ரூபாய் செல வில் கட்டப்பட்டிருக்கும் அந்த மாளிகையில் ஆண்டவனுக்கு ஒர் இடம் இல்லை. மனத்தில் இருந்தால் அல்லவா அங்கே இருக்கும்? இறைவனை மறந்து சிங்காரமாகக் கட்டிய வீடு அது. அந்த வீட்டைத் தன்னுடைய மனைவியின் திருவுள்ளப்படி கட்டியிருக்கிறான். அவள் என்ன வசதி சமையலறையில் வேண்டும் என்றாளோ அவற்றையெல்லாம் அமைத்திருக்கிறான். அவள் விருப்பப்படியே நல்ல காற்று வரும் இடத்தில் படுக்கை அறையை வகுத்திருக்கிறான். சிங்கார வீட்டில் அந்தச் சிங்கார மடந்தையுடன் வாழ்கிறான். தன்னுடைய கைப்பொருளை 223