பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படிக்கும் திருப்புகழ் 1 - மனிதன் தன் வாழ்நாளில் பல விதமான ஆசை கொள் கிறான். வறுமையினாலும் நோயினாலும் அவனுக்குத் துன்பம் வருகிறது. அவனுக்கு அச்சத்தைத் தரும் எல்லாவற்றையும்விட மிகப் பெரியது மரணம். மரணத்தை வெல்லும் வன்மை யாருக்கு உண்டாகிறதோ அவர்கள் வேறு எதற்கும் அஞ்சுவது இல்லை. நோய்க்கு மருந்தும், வறுமைக்குச் செல்வமும், பசிக்கு உணவும் பரிகாரமாக இருப்பது போல, மரணத்திற்கு இறைவன் திருவருள் ஒன்றுதான் பாதுகாப்பு. அவன் திருவருள் இன்பத்தில் ஊறி நின்ற அருணகிரிநாதப் பெருமான் உலகிலுள்ள ஆருயிர்கள் மரணத்தி னின்றும் நீங்கி உய்யும் பொருட்டுப் பலவகையில் உபதேசம் செய்துவருகிறார். காலனால் உண்டாகும் பயத்தைப் போக்கிக் கொள்ள அவர் காட்டுகிற உபாயங்கள் பலவற்றை அவ்வப்போது பார்த்து வருகிறோம். இப்போது ஒரு வகையான பரிகாரத்தை நமக்குச் சொல்கிறார். அதை இனிக் கவனிப்போம். நாடோடிப் பாடல்கள் நம் நாட்டிலுள்ள மக்கள் யாவரும் உழைத்து வேலை செய் கிறார்கள். ஒரு சாரார் மூளையினால் உழைக்கிறார்கள். பெரும் பாலோர் உடம்பினால் உழைக்கிறார்கள். மூளையினால் வேலை செய்பவர்கள் ஐந்து மணி வேலை செய்தால் உடம்பினால் வேலை செய்கிற தொழிலாளர்கள் எட்டு மணி வேலை செய்கிறார்கள். கிராமங்களில் சொந்த நிலங்கள் வைத்துக் கொண்டோ, பிறர் நிலங்களிலோ பாடுபடுகின்ற பாட்டாளி மக்கள் காலை முதல் மாலை வரையில் நிலத்தில் பாடுபடுகிறார்கள். உடம்பை வளைத்து நிமிர்த்திக் கடுமையான தொழில்களைச் செய்கிற தொழிலாளர் களுக்கு வேலையில் அலுப்புத் தட்டுவது இல்லையா? உடம்பு