பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 "அத்தமும் வாழ்வும் அகத்துமட் டேவிழி அம்பொழுக மெத்திய மாதரும் வீதிமட் டேவிம்மி விம்மிஇரு கைத்தலம் மேல்வைத் தழுமைந் தரும்சுடு காடுமட்டே, பற்றித் தொடரும் இருவினை புண்ணிய பாவமுமே." இருவினை புண்ணிய பாவ வினை என்பன உலகிலுள்ள மக்களின் கண் ணுக்குத் தெரியாதவை. அவை உண்டென்று அவற்றின் விளை வாகிய இன்ப துன்பங்களை அநுபவிக்கும்போது உணர்ந்து கொள்ள முடிகிறது. இரண்டு கம்பிகள் ஒரேமாதிரியாகத்தான் ஒடுகின்றன. இரண்டுக்கும் வித்தியாசம் ஒன்றும் தெரியவில்லை. ஒரு கம்பியைத் தொடுகிறான்; ஒன்றும் தெரியவில்லை. மற்றொரு கம்பியைத் தொடுகிறான், டக்கென்று ஷாக் அடிக்கிறது. இந்த விளைவைக் கொண்டே இது மின்சாரக் கம்பி, தொடக்கூடாது என்று உணர் கிறான். சாதாரணக் கம்பிக்கும் மின்சாரக் கம்பிக்கும் வித்தியாசம் கண்ணுக்குத் தெரிகிறதா? இரு வினைகளும் இப்படியே அநுபவமாக வந்து தாக்கும்போதுதான் உண்மை தெரியும். ஒரு தகப்பனாருக்கு இரண்டு பிள்ளைகள், இரட்டைக் குழந்தைகளாகப் பிறக்கிறார்கள். இரண்டு பேரையும் படிக்க வைக்கிறார். ஒருவனுடைய முயற்சி எல்லாம் பயன் அளித்து வருகிறது. மற்றொருவன் தொட்டது எல்லாம் தோல்வியாக முடிகிறது. அவன் எம்.ஏ. தேர்ச்சி பெற்று விட்டு நல்ல உத்தி யோகத்தில் இருக்கிறான்; இவன் எஸ்.எஸ்.எல்.ஸி.கூடப் படிக் காமல் வீட்டில் இருக்கிறான். இதற்குக் காரணம் என்ன? இரண்டு கம்பியும் ஒன்றாகத் தோன்றினாலும் ஒரு கம்பியைத் தொடும் போது 'ஷாக் அடிப்பதனால் அது மின்சாரக் கம்பி என்று தெரிந்து கொள்வதுபோல, இரண்டு பிள்ளைகளும் ஒரே தகப்பா னாருக்கு, ஒரே சமயத்தில் பிறந்து, ஒரே வீட்டில் வளர்ந்து வந்தா லும் அவனுடைய புண்ணிய வினையால் அவனுக்கு எல்லாக் காரியமும் அதுகூலமாகின்றன; இவனுடைய பாவம் இவன் முயற்சி எல்லாம் தோல்வி அடையும்படியாகச் செய்கிறது. இப்படி உணர்ந்து கொள்ளாமல் வேறு எப்படி உணர்ந்து கொள் 226