பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 தனி வழிக்குத் துணையாக வரமுடியாதே. அவற்றைச் சங்காதம், துணை என்று எண்ணிக் கொண்டிருந்தால் கெட்டுப்போக வேண்டிவரும். உயிரைத் தொடர்ந்து வருவது புண்ணிய பாவ வினைகள்தாம். நம்மிடம் உள்ள பொருள்களை ஏற்பவர்களுக்கு இட்டுப் புண்ணியத்தைத் தேடிக் கொள்ள வேண்டும். பொங்கார வேலையில் வேலைவிட்டோன் அருள்போல, அது எங்காயினும் உதவ வரும். இறைவனுடைய அருளைப் பொருளாக நினைக்கிறவர் களுக்குத் தங்கள் கையிலுள்ள பொருள் எதுவும் பொருளாகத் தோன்றாது. இறைவன் அருளிடத்தில் நம்பிக்கை உடையவர் களுக்குப் பொருளிலே பற்று இராது. இறைவன் அருள் உதவி செய்ய வந்தால் பொருள் அறமாக மாறிவிடும். இளையான்குடி மாற நாயனார் இளையான்குடி மாறனார் என்கிற வேளாளர் ஒருவர் காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்தார். அவருக்குப் பண்ணை நிலங்கள் மிகுதியாக இருந்தன. விளைச்சல் முழுவதையும் சிவனடியார்களுக்கே அமுது படைப்பதில் செலவிட்டுக் கொண் டிருந்தார். - “எத்தனை அன்பு எத்தனை தர்மம் செய்கிறார்' என்று சிலர் அவரைப் பாராட்டிக் கொண்டிருந்தார்கள். எல்லோரும் அப்படிப் பாராட்டுவார்களா? "என்னிடம் பணம் இருந்தாலும் நானும் அப்படித் தர்மம் செய்வேன்' என்று சொல்கிறவர்கள் எத்தனை பேர்? பணம் படைத்தவர்கள் எல்லோரும் தர்மம் செய்கிறார்களா? ரூபாய்க்கு ரூபாய் வட்டி சேர்த்து வாங்கிச் சேமித்து வைக்கிறவர்கள் இல்லையா? நம்மால் தர்மம் செய்ய முடியாவிட்டாலும், "அவன் தர்மவான். அளவற்ற தர்மங்களைச் செய்து வருகிறான்' என்று சொல்வது நல்லது. "அவன் பண்ணு கிறானே. நீ பண்ணவில்லையே' என்று யாராவது சுட்டிக் காட்டப் போகிறார்களே என்பதற்காக இவர்களே, 'எனக்கும் பணம் இருந்தால் தர்மம் செய்வேன்' என்று சொல்லிக் கொண்டு விடுகிறார்கள். - இளையான்குடி மாறனார் செய்த தர்மத்தைப் பார்த்தும் இப்படித்தான் பேசினார்கள். "அவனுக்கு இருக்கிறது; தர்மம் 228