பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எங்காயினும் வரும் செய்கிறான். அந்த மாதிரி நமக்கு இல்லையே, தர்மம் செய்ய' என்று பொறாமைப்பட்டுக் கொண்டிருந்த பாவிகளுக்குப் புத்தி புகட்ட வேண்டுமென்று இறைவன் கருதினான். மாறனாருக்கு வறுமை உண்டாயிற்று. கையில் இருந்த கொஞ்ச நஞ்சம் பொருளையும் அவர் தர்மம் செய்து வந்தார். நிலங்களை எல்லாம் விற்றுத் தர்மம் செய்து விட்டார். ஒரே ஒரு வயல்தான் எஞ்சி யிருந்தது. அதில் விளைகிற நெல்லைக் கொண்டு தொடர்ந்து அடியார்களுக்கு அமுது இடவேண்டுமென்று அவருக்கு ஆசை வீட்டில் வைத்திருந்த நெல்லைக் கொண்டுபோய் அன்று காலையில்தான் விதைத்துவிட்டு வந்தார். மாலையிலே இடி மின்னனுடன் மழை வந்துவிட்டது. "ஐயோ வயலில் விதை மிதக்குமே” என்று கவலைப்பட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்கும் போது, இரவு பத்துமணிக்கு ஒருவர், 'ஐயா ஏதாவது கொடுங்கள் புசிக்க; மிகவும் பசிக்கிறது” என்று கேட்டுக் கொண்டு வந்தார். எத்தனை தர்ம நினைவுடையவர்களாக இருந்தாலும் நாமாக இருந்தால் என்ன சொல்வோம்? 'போ ஐயா, போ. இராத்திரி பத்து மணிக்குத்தான் பிச்சை கேட்க வருகிறதோ? காலையில் வா' என்று விரட்டுவோம். அவர் என்ன நினைத்தார் தெரியுமா? கொட்டுகிற மழையில் இரவு பத்து மணிக்குப் பிச்சை கேட்க அவன் வந்தான். ஆகையால், "ஐயோ பாவம் எத்தனை நாளாகப் பட்டினியாக இருக்கிறாரோ! எவ்வளவு பசியோ!' என்று நினைத்து இரங்கினார். வருத்தம் உண்டாயிற்று. உள்ளே போனால் சாப்பாடு இல்லை. சமைக்க லாம் என்றால் அரிசி இல்லை. விறகு இல்லை. உள்ளே அத்தனை வறுமை! அவருடைய வேதனையை ஒரே விநாடியில் உணர்ந்து கொண்டாள் அவருடைய மனைவி. அவள் அறம் வளர்க்கும் பெருமாட்டி. நீங்கள் ஏன் வருந்துகிறீர்கள் காலையிலே விதைத்த நெல் இந்த மழையில் நிச்சயம் மேலாகத்தான் மிதக் கும். அதுவும் ஒரு பக்கமாக ஒதுங்கிக் கிடக்கும். வயலுக்குப் போய் அதை அரித்துக் கொண்டு வந்துவிடுங்கள். நான் அதைக் குத்தி அரிசியாக்கி விரைவில் சமைத்து விடுகிறேன்' என்று ஆறுதல் கூறினாள். அவரும் அப்படியே கொட்டுகிற மழையில் 229