பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எங்காயினும் வரும் துணையாக வருவார்கள்? அத்தகையவர்களைப் பார்த்து இடித்து உரைக்கிறார் அருணகிரியார். 'நீங்கள் எவற்றை வாழ்க்கைக்கு நலம் செய்யும் என்று சேர்த்து வைக்கிறீர்களோ அவை பிறகு உதவ வருவதில்லை. ஏற்பவர்களுக்கு இட்டதுதான் வரும். அது எப்போது எப்படி வரும் என்று உங்களுக்குத் தெரியாது. எப்படியும் எங்கேனும் வரும். முத்துக்களையுடைய கடலில் வேலை விட்டவனுடைய அருள் போல எங்காயினும் வந்து உதவும். இது சத்தியம்' என்று அருளையும், பொருளையும் இணைத்து ஒர் அறிவுரைப் பாடலை அருள்கிறார் அருணை முனிவர். பொங்கார வேலையில் வேலைவிட் டோன்.அருள் போல்உதவ எங்கா யினும்வரும், ஏற்பவர்க்கு இட்டது. இடாமல்வைத்த வங்கா ரமும்உங்கள் சிங்கார வீடும் மடந்தையரும் சங்காத மோகெடு வீர்!உயிர் போம்அத் தனிவழிக்கே! (கெடுமதியாளர்களே பொங்குகின்ற முத்துக்களை உடைய கடலில் வேலாயுதத்தை விட்ட முருகனுடைய அருள் அவனுடைய அன்பர்களுக்கு எங்காயினும் வந்து உதவுவது போல, உங்களிடம் வந்து குறையிரந் தவர்களுக்கு இட்ட புண்ணியத்தின் விளைவு எங்காயினும் உதவி புரிய வந்து சேரும்; அப்படி இரந்தவர்களுக்குக் கொடுக்காமல் பாதுகாத்து வைத்த தங்கமும், உங்கள் அழகிய வீடும், அழகிய மனைவிமாரும் உயிர் உடம்பை விட்டுச் செல்லும் அந்தத் தனி வழிக்குத் துணை ஆவார்களோ? பொங்கு வேலை, ஆர வேலை என்று கூட்ட வேண்டும். ஆரம் - முத்து. வேலை - கடல். ஏற்பவர்க்கு இட்டது எங்காயினும் வரும். ஏற்பவர் - இரப்பவர். இட்டது - அளித்தது. வங்காரம் - பொன்; உப லட்சணத்தால் எல்லா வகையான பொருள்களையும் குறித்தது. சிங்காரம் - அழகு. சிங்கார மடந்தையர் என்றும் சேர்த்துப் பொருள் கொள்ள வேண்டும். 'சிங்கார மடந்தையர்.தீநெறி போய்' என்பது கந்தர் அநுபூதி, சங்காதம் - உறவு; இங்கே துணை. கெடுவீர் என்பது இரக்கத்தால் வரும் ஒரு சொல்; கெடுவாய் என்பதும் அது; 'கெடுவாய் மனனே கதிகேள்' என்று கந்தர் அநுபூதியில் வரும். தனி வழி - உயிர் உடம்பை விட்டு க.சொ. V-16 231