பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 உடம்பில் நிகழவில்லை; மனம் வெறும் நினைவுகளை விரி, விட்டுத் துன்புறுகிறது. நிகழ் காலத்தில் உடம்பிலே உண்டாகும் துன்பத்தை நாம் உணர்ந்து துன்புறுகிறோம். அந்த ஒரு சமயத்தில்தான் உடம்பு மனமும் இணைந்து துன்புறுகின்றன. உடம்பு துன்புறாமல் மனம் மட்டும் துன்புறும் நிலைகளை ஐந்து வகையாகப் பிரிக்கலாம். தமக்குச் சென்ற காலத்திலும் வருங்காலத்திலும் நேரும் துன்பங் களை நினைத்துத் துன்புறும் நிலைகள் இரண்டு; அப்படியே பிறருக்கு முக்காலத்திலும் உண்டாகும் துன்பங்களை எண்ணி வருந்தும் நிலைகள் மூன்று என்று ஐந்து வகைகள் ஆக்கிச் சொல்லலாம். ஒரு குழந்தை இறந்துவிட்டதை நினைத்து வரும் துன்பம், அது இறக்கும் நிலையில் இருப்பதை நினைத்து வரும் துன்பம், இனி இறந்துவிடுமே என்று எண்ணுவதால் வரும் துன்பம் என்று பிறரைச் சார்ந்து மூன்று நிலைகள் இருக்கின்றன. அப்படியே நாம் முன்பு அநுபவித்த துன்பத்தை எண்ணிப் படும் துயரம், வருங்காலத்தில் இது வருமே என்று அஞ்சும் துயரம் என்று நம்மைச் சார்ந்த நிலைகள் இரண்டு இருக்கின்றன. உடம்பு காரணமாகப் படும் துயரத்தைக் காயக்கிலேசம் என்றும், மனத்தால் படும் துயரை மனக் கிலேசம் என்றும் சொல்வார்கள். இந்த இருவகையிலும் நாம் படுகிற துயரத்தைப் போக்கிக் கொள்ள வழி உண்டா? - இந்த ஆராய்ச்சியை நாம் செய்வதில்லை. இன்பம் வந்த போது ஆரவாரம் செய்து கூத்தாடிக் குதிக்கிறோம். துன்பம் வந்துவிட்டால் ஐயோ, அப்பா என்று புலம்புகிறோம். மறுபடியும் அவற்றை மறந்து வாழ் கிறோம். திரும்பத் திரும்ப இந்தச் சுழல் சக்கரமாகவே நம் வாழ்க்கை அமைந்துவிடுகிறது. - அருணகிரிநாதர் இந்தக் கிலேசங்களைத் தாம் படுவதாகச் சொல்லிப் பரிகாரமும் சொல்கிறார். கிலேசப்படாத நிலையை எய்திய அவர் அவ்வாறு சொல்வது நமக்காக என்றும், அது அவருடைய இணையற்ற கருணைச் செயல் என்றும் அடிக்கடி சொல்லி வந்திருக்கிறேன். எப்படி இந்தக் கிலேசங்களைப் போக்கிக் கொள்ளலாம் என்பதைப் பார்ப்போம். 238