பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 மனமும் நாம ரூபங்களும் நாம ரூபம் இல்லாவிட்டால் மனம் எதையும் பற்றிக் கொள்ளாது. நமக்குக் கண், காது, மூக்கு எல்லாம் இருக்கின்றன. கண்ணாலே ஒன்றைப் பற்றிக் கொள்ள வேண்டுமானால் அது ஒரு பொருளாக இருக்க வேண்டும். புகை இருக்கிறது; கண் ணாலே அதைப் பார்க்கிறோம்; புகையைக் கையினால் பற்றிக் கொள்ள முடியுமா? கையினால் கட்டையாக இருந்தால் பற்றிக் கொள்ளலாம். கையினால் பற்றுகிற பொருளைக் காதினால் பற்றிக் கொள்ள முடியுமா? காதினால் பற்றிக் கொள்வது ஒலியாக இருக்க வேண்டும். மூக்கினால் பற்றிக் கொள்வது மணமாக இருக்க வேண்டும். இந்திரியங்களில் ஒவ்வொன்றும் எல்லாவற்றையும் பற்றிக் கொள்ள இயலாது. மனம் ஒன்றைப் பற்றிக் கொள்ள வேண்டுமானால் அது இந்த ஐந்து இந்திரியங்களின் சார்புடையதாக வரவேண்டும். மூக்கினுடைய சார்பு பெற்று மணமாகவும், காதினுடைய சார்பு பெற்று ஒலியாகவும், கண்ணினுடைய சார்பு பெற்று ஒளியாக வும், நாவின் வழியாகச் சுவையாகவும், உடம்பின் வழியே பரிச மாகவும் இப்படி ஐந்து வகையான இந்திரியங்களின் சார்பாக வரும் அநுபவத் திரட்சியைத்தான் மனம் பற்றிக் கொண்டு நிற்கும். ஐந்து இந்திரியங்களுள் சிறப்பாக இருப்பவை கண்ணும் காதும். கண்ணுக்குப் புலனாவது உருவம். காதுக்கு விஷயமாக இருப்பது நாமம். நாம ரூபம் இல்லாத எந்தப் பொருளையும் உணர்ந்து கொள்ளும் சக்தி மனத்திற்கு இல்லை. இறைவனை மனம் உணர்ந்து கொள்ள வேண்டுமென்றால் அவனுக்கும் நாமமும், ரூபமும் இருந்தாகவேண்டும். ஆகவே மனவாக்குக் காயத்திற்கு அப்பாற்பட்டவனாக அவன் இருந்தாலும், கருவி கரணங்களோடு மனம் நடமாடுகிற பிரதேசத்தில், மனத்தினால் பற்றிக் கொள்ளத் தக்க வகையில் அவன் நாமரூபத்தைப் பெற்றுக் கொண்டு வருகிறான். பெருங் கருணையுடையவனாகிய அவன் மனத்திற்கும் வாக்குக்கும் கட்டுப்பட்டு நமக்காக நாம ரூபம் உடையவனாக வரும்போது, நாம் அவனைப் பற்றிக் கொள்ளாவிட்டால் உலகில் நாம் வாழ்வதால் பெறும் பயன் இல்லை. எந்த இடத்தில், எந்தக் காலத்தில், எந்தப் பொருள் 240