பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தண்டைச் சிற்றடி இடைக்கிறதோ அந்தப் பொருளைப் பயன்படுத்திக் கொள் கிறவன்தான் அறிவாளி. நமக்குச் சரீரம் கிடைத்திருப்பது பெரிய பாக்கியம். இது கிடைத்தற்கரியது. இது பெரும்பேறு என்று எப்போது நாம் சொல்லலாம்? சரீரம் உடைய நமக்காக இறைவன் திருமேனி எடுத்துக் கொண்டு வருகிறானே; இந்தச் சரீரம் அந்தத் திருமேனி யோடு சம்பந்தப்பட்டால்தான் பாக்கியம்; இல்லாவிட்டால் பயன் இல்லை. சம்பந்தம் செய்து கொள்ளுதல் சரீரம் படைத்தவர்களாகிய நாம் நம்மைப் போலவே சரீரம் படைத்தவர்களோடு சம்பந்தம் செய்து கொண்டிருக்கிறோம். சரீரம் சரீரத்தோடு சம்பந்தப்படுகிறது. கணவன் மனைவி சம்பந்தம், குரு சிஷ்ய சம்பந்தம், அதிகாரி ஊழியன் சம்பந்தம் என்று இரண்டு இரண்டு பேர்கள் சேர்ந்து சேர்ந்து ஒப்பந்தம் செய்து கொள்ளும் பல சம்பந்தங்கள் உலகில் இருக்கின்றன. அரசன் என்றால் குடி இருக்க வேண்டும். எசமான் என்றால் ஊழியன் இருக்க வேண்டும். இரவலன் என்றால் கொடுக்கிறவன் இருக்க வேண்டும். மனைவி என்றால் கணவன் இருக்க வேண்டும். குழந்தை என்றால் தாய் இருக்க வேண்டும். இப்படி ஒன்றோடொன்று சம்பந்தப்பட்டு உலகம் இயங்குகிறது. அப்படி இயங்குகிற உலகத்தில் சரீரம் படைத்திருப்பதனால் சம்பந்தத்தையும் அதிகமாக்கிக் கொள்கிறோம். ஒருவன் மற்றொருவனோடு சம்பந்தம் ஏற்படுத்திக் கொள்ளும் போது பெரும்பாலும் அவன் நம்மைவிட உயர்ந்தவனாக இருக்க வேண்டும் என்றே நினைக்கிறான். பெண்ணைப் பெற்றவன் தன்னைவிட அதிகப் பணக்காரன் வீட்டுப் பிள்ளைக்குத் தன் பெண்ணை மணம் செய்து கொடுக்க நினைக்கிறான். பிள்ளையைப் பெற்றவன் தன் பிள்ளைக்குத் தன்னைவிடப் பணக்காரன் வீட்டுப் பெண் மனையாட்டியாக வாய்க்க வேண்டும் என்று நினைக்கிறான். தாம் சம்பந்தம் பண்ணுகிற இடம் தம்மைக் காட்டிலும் சிறந்த இடமாக இருக்க வேண்டும் என்று நினைப்பது மனிதர்களின் இயல்பு. 241