பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 நம்மையும்விட அதிகச் செல்வாக்கு உடையவர்களோடு, பெரும் பதவியில் உள்ளவர்களோடு, உறவு கொள்ள வேண்டும் என்று நாம் நினைக்கிறோம். பெரிய நிலையில் உள்ளவர் களுக்கும் நமக்கும் உள்ள உறவு மிகவும் சிறியதாக இருந்தாலும் அதைப் பெரிதாகப் பிறருக்கு எடுத்துச் சொல்கிறோம். சொந்தத் தம்பி மிக ஏழையாக இருக்கிறான். அவனைத் தம் தம்பி என்று கூடப் பணம் படைத்தவர்கள் சொல்லிக் கொள்ள விரும்புவ தில்லை. தம்பி என்கிற உறவையே பலர் மறந்து விடுகிறார்கள் மறக்காமல் இருந்தாலும் பிறருக்குச் சொல்வது இல்லை. இது உலக இயல்பு. பெரிய உறவு இப்படி நம்மையும்விடப் பெரியவர்களோடு உறவு கொள்ள வேண்டும் என்று நாம் விரும்புகிறோமே; இறைவனைக் காட்டி லும் உலகத்தில் பெரியவன் யாராவது இருக்க முடியுமா? சரீரம் உடைய நாம் அவனோடு தொடர்பு கொள்ள வேண்டுமானால் அவனும் சரீரம் உடையவனாகத்தானே இருக்க வேண்டும்? தாயாகத் தந்தையாகக் குழந்தையாக அவனோடு தொடர்பு கொள்ள வேண்டும் என்று நினைத்தே நாம ரூப எல்லையைக் கடந்து நிற்கும் அவனுக்கு, நாம ரூபங்களோடு கூடிய திவ்ய மங்கள சொரூபத்தைக் கற்பித்து, நம் நாட்டுப் பெரியவர்கள் அமைத்திருக்கிறார்கள். கோயில்களில் அவன் விக்கிரக ரூபத்தில் இருப்பது, நாம ரூப வடிவம் உடைய நமக்காகத்தான்; சரீரம் உடைய நாம் சரீரம் உடையவனாகக் காட்சி தரும் அவனோடு தொடர்பு கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். ஒரு பெரிய பணக்காரனோடு நாம் தொடர்பு கொள்ள விரும்புவதற்குக் காரணம், பணமுடை வந்தால், அவன் நமக்கு உதவி செய்வான் என்கிற நினைப்புத் தான். இறைவன் நமக்குப் பேருதவி செய்கிறவன் என்ற நினைப் போடு அவனுடன் தொடர்பு கொள்ள வேண்டும். செல்வர்களும் இறைவனும் ஒரு சிறிய பணக்காரரைப் போய்ப் பார்க்க வேண்டுமென் றால் எளிதில் முடிகிறதா? காலையில் போனால் அவர் இருப்பது இல்லை. மாலையில் போனாலும் அப்படித்தான். எப்போது பார்க்கலாம் என்றால், 'எப்படிச் சொல்ல முடியும்? விடியற் 242