பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படிக்கும் திருப்புகழ் வார்கள். அந்த அந்தத் தொழிலில் ஈடுபடுபவர்கள் தங்களுக்கு ஏற்ற பாடல்களைப் பாடிக் கொண்டு வருகிறார்கள். அவற்றை யார் முதலில் பாடினார்கள் என்று சொல்ல முடியாது. காலம் கடந்து, இடம் கடந்து அவை பிரயாணம் செய்து கொண்டே இருக்கும். அந்தப் பயணத்தில் புதிய புதிய அடிகள் வரும்; பழைய அடிகள் மறைந்து போகும். வீடுகளிலும் முதிர்ந்த பெண் மணிகள் இத்தகைய பாடல்களைப் பாடுவது உண்டு. தாயிட மிருந்து மகள் தெரிந்து கொள்ள, அவள் மீட்டும் தன் மகளுக்குச் சொல்ல, பரம்பரை பரம்பரையாக இந்தப் பாடல்கள் வருகின்றன. ஆங்கிலத்தில் "Folk Songs" என்று இவற்றைச் சொல்வார்கள். இன்பமும் துன்பமும் நம்முடைய பெரியவர்கள் வேலை செய்கிறபோது உடம்புக்கு வருகிற துன்பத்தைப் போக்கிக் கொள்ள இத்தகைய பாடல்களைப் பாடிக் கொண்டிருப்பார்கள். பாட்டின் பொருள் தெரியாவிட்டா லும் இதன் இசை அமைப்பு உள்ளத்திற்கு ஊக்கத்தை உண் டாக்கும். அதனோடு பாட்டின் பொருளும் தெரிந்து விட்டால் அவற்றில் ஒரு தனிச் சுவை உண்டாகும். உடம்பைப் பெற்றவர்கள் வாழ்நாள் முழுவதும் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். உழைப்பாவது மூன்று கரணங்களினால் செய்கிற செயல்கள். மனத்தினாலே சிந்தித்தாலும் உழைப்புத் தான்; வாக்கினால் பேசினாலும் உழைப்புத்தான்; உடம்பினால் வேலை செய்தாலும் உழைப்புத்தான். ஆகவே ஏதாவது ஒரு வகையில் மனிதன் உடம்பு எடுத்த காலம் தொடங்கி இறுதி வரைக்கும் வேலை செய்கிறான். அதனால் விளைகிற இன்ப துன்பங்களை நுகர்கிறான். ஆயினும் அவன் இன்பத்தை நினைந்து அமைதி பெறுவது இல்லை. எப்பொழுதும் இன்பத்தையே அனுபவிக்கிறவர்களோ, துன்பத்தையே அனுபவிக்கிறவர்களோ உலகில் யாரும் இல்லை. இன்பமும் துன்பமும் கலந்தே நமது வாழ்க்கையில் வருகின்றன. ஆனால் மனித இயல்பு துன்பத்தை நினைந்து ஏங்குவதுதான். இன்பம் வந்ததே என்று அதை நினைந்து, துன்பம் வந்த காலத்தில் மகிழ்ச்சி அடைவது இல்லை. இன்பம் வந்த காலத்தில்கூட முன்பு வந்த துன்பத்தை நினைத்து மறுபடி யும் அது வந்துவிடுமோ என்று ஏங்குகிறான். இன்பத்தினால் உண்டான உணர்ச்சி நெடுநேரம் நிற்பதில்லை. 15