பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தண்டைச் சிற்றடி மாளிகை கட்டிக் கொண்டு வசிக்கிறானே; அவன் உனக்கு உறவு தானே? அவன் ஒருவன் இருக்கிறான் என்று என்றாவது நீ சிந்தனை செய்தது உண்டா? அவனிடம் போகவேண்டுமென்று நீ எண்ணியதுகூட இல்லை போலிருக்கிறதே! பணம் இல்லாமல் பல பேர்களிடம் கடன் வாங்கிக் கொண்டிருக்கிறாய். முந்திய கடனை நினைத்துச் சாம்புகிறாய். இன்றைக்கு வாங்கியிருக்கிற கடனை நினைத்துச் சாம்புகிறாய். நாளைக்கு வாங்கப் போகிற கடனை நினைத்து வருந்துகிறாய். சாப்பிடும்போது உண்டாகிற கொஞ்ச இன்பமும் உனக்கு இந்த நினைவுகளினாலேயே விஷ மாகி விடுமே அப்பா. உனக்குச் சொந்தக்காரன், பெரிய பணக் காரன் ஒருவன் இருக்க, அவனைச் சிந்திக்காது எங்கெங்கோ அலைகிறாய்!” என்று சொன்னார். "ஐயோ! அப்படி ஒரு பணக்காரர், எனக்கு உறவினர் இருக் கிறாரா? நான் என்னுடைய காரியாலயத்துக்குத் தினமும் போய் வந்து கொண்டிருக்கும் சாலையிலேயே மாளிகை கட்டிக் கொண் டிருக்கிறாரா? அவரைப் பற்றி எனக்குத் தெரியாமல் போய் விட்டதே! அவரைப் பற்றி நான் சிந்திக்கவே இல்லை, சுவாமி.' சிந்திக்கிலேன் 'இத்தனை நாளும் சிந்திக்காமல் இருந்தது கிடக்கட்டும். இனியாகிலும் கொஞ்சம் சிந்தி, பயன் உண்டு. நான் அப்புறம் வருகிறேன்” என்று பெரியவர் போய்விட்டார். சேவித்தல் அடுத்த வாரம் அவர் மறுபடியும் வந்தார். அப்போது இந்த ஏழை துன்பத்தால் வாடிய முகத்தோடு, தொங்கிய தலையோடு உட்கார்ந்திருந்தான். 'என்னப்பா, நீ இப்படி உட்கார்ந்திருக் கிறாய்? அந்தப் பணக்காரனைப் போய்ப் பார்த்தாயா? 'என்று கேட்டார் பெரியவர். 'அவரைப் போய்ப் பார்க்கவில்லை சுவாமி. அவரைப் பற்றித்தான் சிந்தனை செய்து கொண்டிருக்கிறேன்” என்று இவன் சொல்வதற்கு முன்னர் அவர் பேசினார். "அட பைத்தியமே சிந்தித்தல்தான் காரியம் செய்வதற்கு முதல் படி, இப்படியே சிந்தித்துக் கொண்டு இருந்தால் போதாது க.சொ.1V.17 247