பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 அப்பா. போகிற போக்கில் ஒரு கணம் நின்று சேவி, வேண்டும்; அப்படிச் செய்யவில்லைபோல் இருக்கிறதுே. என்று சொன்னார். 'நான் என்ன செய்வேன் காலையில் எழுந்தால் ஆறரை மணிக்கே காரியாலயத்துக்கு ஒடுகிறேன்; இரவு ஒன்பது மணிக்குத்தான் திரும்ப முடிகிறது. விடுமுறை என்பது இந்தப் பாவிக்கு இல்லையே! யார் யாரையோ தினமும் சேவித்துக் கொண்டிருக்கிறேன் சுவாமி ஒரு நாளைக்குக்கூட அந்தப் பணக்காரரை நான் நின்று சேவிக்கவில்லையே!” நின்று சேவிக்கிலேன் 'இப்போதுதான் என்ன குடி மூழ்கிப் போய்விட்டது, நாளைக்கு நீகாரியாலயம் போகிறாய் அல்லவா? மிக வேகமாகப் போகும் போதே ஒரு கணம் அந்த வீட்டு வாசலில் நில் அப்பா, நிற்காவிட்டால் ஒடுகிற ஒட்டத்தில் அந்த மாளிகை உன் கண்ணில் படாது. நின்றால் நிச்சயம் அந்தச் செல்வனை நீ பார்த்தாலும் பார்ப்பாய். நின்று அவனைத் தொழுது, அவனிடம் உன் வறுமையை எடுத்துச் சொல்ல உனக்கு நேரம் இல்லா விட்டாலும், போகிற போக்கில் ஒரு கும்பிடு போட்டுவிட்டுப் போ. இப்படித் தினமும் நீ நின்று சேவித்துவிட்டுப் போனால் போதும். அவனே, அது யாரப்பா, தினமும் நின்று என்னைச் சேவித்துவிட்டுப் போகிறான்' என்று உன்னைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்புவான். முன்பு அவனைப் பற்றிச் சிந்திக்க வில்லை என்றாய்; இப்போதோ சிந்திக்கிறாய். சிந்திப்பதன் பயனை அடைய வேண்டுமானால் கொஞ்சம் அவனது மாளிகை யின் முன் நின்று சேவிக்க வேண்டும்' என்று சொல்லிவிட்டு அந்தப் பெரியவர் போய்விட்டார். மறுநாள் இவன் காரியாலயத்திற்குச் சோற்றுச் சம்புடத்தை எடுத்துக் கொண்டு ஒடுகிற வேகத்திலேயே, அந்தப் பணக்காரனின் வீட்டு வாசலின்முன் நின்றான். யார் யாரோ உள்ளே போய்க் கொண்டும் வந்து கொண்டும் இருந்தார்கள். இவனுக்கும் உள்ளே போக வேண்டும் என்ற ஆசை. நேரம் இல்லாமையினால் நின்றபடியே ஒரு கும்பிடு போட்டுவிட்டு ஓடிவிட்டான். மறுவாரம் அந்தப் பெரியவர் மீண்டும் வந்தார் 'என்னப்பா, கொஞ்சம் உற்சாகமாக இருக்கிறாய்? அந்தப் பணக்காரனை 243