பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தண்டைச் சிற்றடி காணும் போது, நிற்கச் செய்து சேவிக்கலானான். யார் யார் விட்டுக்கோ போவதற்கு நேரம் கண்டு பிடிக்கிற மனத்தை, ஆண்டவனுடைய ஆலயத்திற்குப் போக நேரத்தைக் கண்டு பிடிக்கச் செய்தான். ஆலயத்திற்குச் சென்று எம்பெருமானின் தண்டைச் சிற்றடியை வந்திக்கச் செய்தான். ஒருநாள், இரண்டு நாள் அல்ல; தினமும் இந்தப் பழக்கம் வந்தது. காலப் போக்கில் அதுவே இவனுக்கோர் இன்பமாக விளைந்தது. ஆலயத்திற்குப் போனவுடனேயே ஒரு மகிழ்ச்சி, ஓர் உற்சாகம். தண்டைச் சிற்றடி யில் வீழ்ந்து வீழ்ந்து வணங்க, அந்தப் பெருமானின் கடாட்ச வீட்சண்யத்தால் இவனுக்கு ஒன்றுமே தெரியாமல், உடம்பு புளகம் போர்த்துவிடும். வாழ்த்துதல் கண்களில் நீர் தாரை தாரையாகச் சொரிய அந்தக் குழந்தை யின் தண்டைச் சிற்றடியைப் பார்ப்பான். மெல்லக் கண்ணை உயர்த்தி அந்தப் பெருமான் தன் திருக்கரத்தில் வைத்திருக்கும் வேலைப் பார்ப்பான். மறுபடியும் கமல அடியைப் பார்ப்பான். சேவல் கொடியைப் பார்ப்பான்; ஷண்முகத்தைப் பார்ப்பான். 'இவனைப் பார்த்தவுடனே ஓர் இன்பம் கொந்தளிக்கிறதே. இக்குழந்தையின் முகத்தில் கோடித் துன்பம் நீங்கி விடுகிறதே!' என்று என்ன என்னவோ சொல்ல வேண்டுமென்று நெஞ்சு துடிக்கும்; நாவோ தழுதழுக்கும். 'இந்தக் குழந்தையை என்ன சொல்லி வாழ்த்துவது; ஒன்றும் வாழ்த்தத் தெரியவில்லையே!” ஒன்றும் வாழ்த்துகிலேன் என்று இவன் வேதனைப்பட்டுக் கொண்டு குருநாதரிடம் ஓடி னான். 'அந்தக் குழந்தையின் பெயர் என்ன சுவாமி அவனை எப்படி அழைக்க வேண்டும்? எப்படி வாழ்த்த வேண்டும்?" எனக் கெஞ்சினான். "அந்தக் குழந்தையின் புகழைச் சொல்லும் 1500 திருப்புகழ்ப் பாடல்கள் இருக்கின்றன. 108 அலங்காரப் பாடல்கள் இருக் கின்றன. 51 அநுபூதிப் பாடல்கள் உள்ளன. கந்தபுராணம் என்கிற தனிப் புராணமே இருக்கிறது. அவனுக்கு ஆயிரம் பேருக்குமேல் 253