பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 உண்டு; சுருக்கமாகச் சொல்ல 108 நாமங்கள். 12 நாமங், எல்லாம் இருக்கின்றன. இவை யாவும் அந்தக் குழந்தையை பற்றியவைகளே. இப்படிக் கங்குகரை இல்லாமல் பல பெரு மக்கள் அவனை வாழ்த்திப் பாடியிருக்கிறார்கள். இத்தனை யையும் நீ கற்றுச் சொன்னால்தான் அவன் மகிழ்வான் என்று நினைக்காதே. முருகா, குகா, குமரா என்று சொல். இல்லை யானால், ஆறுமுகம் ஆறுமுகம், ஆறுமுகம், ஆறுமுகம், ஆறு முகம், ஆறுமுகம் என்று நீ சொன்னாலும் போதும் அப்பா, அவன் உனக்கு அருள் செய்வான் என்று உபதேசம் செய்தார். குருநாதரின் பேரருளினால் இவனுக்கு மந்திரோபதேசம் சித்தியாயிற்று. தீட்சை வாங்கிக் கொண்டுவிட்டான். இறைவனைப் பற்றிச் சிந்திக்காமல் இருந்தவன். கோயிலைப் பார்த்து நின்று சேவிக்காமல் இருந்தவன், இறைவன் திருவடி யிலே ஒரு முறைகூட வீழ்ந்து வந்திக்காமல் இருந்தவன், அவனுடைய நாமத்தை ஒருதடவைகூடச் சொல்லி வாழ்த்தாமல் இருந்தவன் சிந்தித்தான்; நின்று சேவித்தான்; சிற்றடியை வந்தித் தான். 'முருகா முருகா முருகா' எனச் சதா காலமும் அவனை வாழ்த்திக் கொண்டிருக்க ஆரம்பித்தான். சந்தித்தல் குருநாதர் ஒருநாள் திடீரென்று இவனிடம் வந்து சேர்ந்தார். 'அப்பா! நீ தினமும் அந்தப் பணக்காரனுடைய மாளிகை தேடிப் போய்க் கொண்டிருக்கிறாய் அல்லவா? சில சமயங்களில் உன்னைத் தேடிக் கொண்டு அவன் வரலாம். உன் விலாசம் அவனுக்குத் தெரியும். மற்றப் பணக்காரர்களிடம் கார்கள் பல உள்ளன. அவனிடம் கார் மயில் இருக்கிறது. மயில் வாகனத்தில் ஏறிக் கொண்டு அவனே உன்னைத் தேடிவரும் அற்புதம், என் றைக்கு வேண்டுமானாலும் நிகழும். அப்படி அவனே வரும் போது எதிர்சென்று அழைத்து உபசரி. பேசாமல் இருக்காதே. அவனைச் சந்திக்காமல் இருந்து விடாதே" என்று உபசரித்தார். 'இந்த ஏழையின் குடிசையை நோக்கி அந்தப் பணக்காரன் - கார் மயில் வாகனன் - வருவானா? அப்படி வருவதற்கு நான் என்ன பாக்கியம் பண்ணியிருக்க வேண்டும் என்றைக்கு வரு வான் சுவாமி? இன்று வரையில் அவன் வரவில்லையே! வந்தால் 254