பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 மூர்த்தியைத் தேடிக் கண்டு கொண்டு உள்ளம் நெகிழ்ந்து உரை தடுமாறி வந்திப்பவர் சிலர் இருக்கலாம். கோயிலுக்குப் போது மல், உள்ளம் நெகிழாமல், வீட்டை விட்டு இறங்காமல் இருந்து நையாத மனத்தினரைத் தானே தேடி வந்து, அவர்களது வன்மனப் பாறையை உடைத்து, அவர்களும் நைந்து உருக வேண்டும் என்ப தற்காகவே அவன் உற்சவ மூர்த்தியாக வீதி வலம் வருகிறான். என்றைக்கும் இளமை மாறாத சுந்தரனாகிய அவன் பல பல அலங்காரங்களைச் செய்து கொண்டு பிறர் கண்களைக் கவர வருகிறான். அந்த அழகனைப் பார்த்தாள் ஒரு பெண். அவனிடம் தீராத காதல் கொண்டுவிட்டாள். அவனை நினைந்து அவள் மனம் முன்பெல்லாம் குழையவில்லை; நைந்து உருகவில்லை. வாகனத்தில் ஏறிக் கொண்டு அவன் வரும் சுந்தரக் கோலத்தைக் கண்டவுடன்-அவள் மனம் நைந்து உருகிற்றாம். அவள் தாய் இதைச் சொல்கிறாள். 'நையாத உளத்தினரை நைவிப்பான் இத்தெருவே ஐயாநீ உலர்ப்போந்த அன்றுமுதல்.” வீட்டை விட்டு வெளிவராத மக்கள் தன் அருளுக்குப் பாத்திரமாகாமல் போகக் கூடாது என்கிற பெருங்கருணை யினாலே அவன் வெளிவருகிறான். 'இத்தெருவே அன்றொரு நாள் நீ பவனி போகின்ற அழகைக் கண்டாள். உன்மேல் தீராத மோகம் கொண்டாள். உன்னைத் தரிசனம் பண்ணி மனம் நைந்து உருகாதவர்களுடைய மனத்தை நையும்படி செய்ய வேண்டும் என்கிற கருணையினால் அல்லவா மூலமூர்த்தியாக மட்டும் இருந்து கொண்டிராமல் உற்சவராகவும் வந்து ஆட்கொள்ளு கிறாய்?" என்று அந்தப் பாடல் கூறுகிறது. 'இவ்வாறு மயில்வாகனப் பெருமாள் உன்னைத் தேடி வரும் போது வீட்டை விட்டு வெளியே வந்து சந்திக்க வேண்டும்" என்பதைக் குருநாதர் போதித்தார். "இது வரையிலும் அந்தப் பெருமானைச் சந்திக்கவில்லை சுவாமி இனிமேல் சந்திக்கிறேன்" என்று சொன்னான் இவன். மயில் வாகனனைச் சந்திக்கிலேன் வீதியில் வரும் உற்சவமூர்த்தியைச் சந்திப்பது முதல்நிலை. நாம் வீதியின் வழியாகப் பல இடங்களுக்குப் போகிறோம். கால் 256