பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தண்டைச் சிற்றடி பொய்யை நிந்தித்துவிட்டால் போதுமா? மெய்யை உறுதிப் பாட்டோடு பற்றிக் கொள்ள வேண்டும். கோயிலுக்குப் போவது நல்லது. ஆண்டவனை வாழ்த்தி வணங்குவது நல்லது. ஆகாரத் திலே நியமம், ஆசாரம் ஒழுக்கம் இவை எல்லாவற்றையும் கடைப்பிடிப்பது நல்லது என்ற ஞானம் நமக்குந்தான் தோன்று கிறது. ஆனால் கோயிலுக்குப் போகிறோமா? நாம் பிறன் பொருளை இச்சிப்பது தவறு. பிறருக்குக் கெடுதி நினைப்பது தவறு என்ற ஞானம் பல பல தடவைகள் தோன்றினாலும்கூட நம்மால் பிறருக்குத் துன்பம் விளைவிக்காமல், பிறருடைய பொருளை இச்சிக்காமல் வாழத் தெரியவில்லையே காரணம் என்ன? மனத்திலே திண்மை இல்லை. நினைப்பதைச் செய லாக்கக்கூடிய ஆற்றல், உண்மையைச் சாதிக்கக்கூடிய உறுதிப் பாடு அதற்கு இல்லை. மயில்வாகனனின் அருளைப் பெற்றவர்களோ உண்மையைச் சாதிக்கிறார்கள். எத்தனை இடையூறுகள் வந்தாலும் அவர்கள் கொண்ட உறுதி குலைவதில்லை. உண்மை நமக்குத் தெரிகிறது; பிறருக்கு உபதேசம் செய்யவும் தெரிகிறது. ஆனால் வாழ்க்கை யிலே அவற்றை மேற்கொள்ளும் மன உறுதி பெரும்பாலோர்க்கு இருப்பது இல்லை. நல்ல ஒட்டுமாஞ்செடி வளர்ந்து பூத்து நிற்கிறது. 'இது பூக்குமா? பூத்தால் காய்க்குமா?" என்று ஏங்கினார் இராமலிங்க வள்ளலார் காய்த்தது; பிறகு, 'இது பழுக்குமா? பழுத்தால் குரங்குகள் வந்து தின்றுவிடாமல் இருக்குமா? குரங்குகள் தின்னாமல் நானே தின்றாலும் தொண்டை விக்கிக் கொள்ளாமல் இருக்குமா?’ என்று அவர் ஆண்டவனை நோக்கிச் சொல்கிறார். 'களக்கமறப் பொதுநடம்நான் கண்டுகொண்ட தருணம் கடைச்சிறியேன் உளம்பூத்துக் காய்த்ததொரு காய்தான் விளக்கமுறப் பழுத்திடுமோ வெம்பிஉதிர்ந் திடுமோ வெம்பாது பழுக்கினும்என் குறிப்பில்அகப் படுமோ கொளக்கருது மலமாயைக் குரங்குகவர்ந் திடுமோ குரங்குகவ ராதெனது குறிப்பிலகப் படினும் துளக்கமற உண்ணுவனோ தொண்டைவிக்கிக் கொளுமோ சோதிதிரு வுளமெதுவோ ஏதுமறிந் திலனே.” 261