பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 இறைவனுடைய அருளைப் பெறுவதற்கு இத்தனை தடைகள் இடையூறுகள் உண்டாகும். இத்தனையையும் தாண்டி, இன்பத்தைப் பெறவேண்டுமென்றால் மனத்திலே உறுதி ஓங்க வேண்டும், உண்மையைச் சாதிக்கும் உறுதி வேண்டும். மயில் வாகனனைச் சிந்தித்து, நின்று சேவித்து, சிற்றடியை வந்தித்து, வாழ்த்தி, மனத்திலே சந்திக்க ஆரம்பித்தபின் பொய்யை நிந்திக்கும் நிலை வரும்; உண்மை சாதிக்கும் மன உறுதிப்பாடு வளரும். மன உறுதி முறுக முறுக மெய்யைச் சாதிக்கலாம். அப்போது கிலேசம் இராது. துன்பம் இராது. புந்தியினாலே வருகின்ற கிலேசம், காயத்தினாலே வருகின்ற கிலேசம் போய் விடுகின்றன. மனத்தினால் வருகின்ற துன்பம் போகவேண்டுமா னால் மனோநாசம் ஏற்படவேண்டும். உடம்பினாலே வருகின்ற துன்பம் போகவேண்டுமானால் உடம்பு அற்றுப் போக வேண்டும். உடம்பு இல்லாத நிலை பிறவி எடுக்காத நிலை. இறைவனை நினைந்து, வாழ்த்தி, தியானித்துச் சமாதி கூடினால் மனோநாசம் உண்டாகும்; பிறவி இல்லா முக்திநிலை ஏற்படும். மனமற்றநிலை, பிறவி அற்ற நிலை வருவதற்கு, அதாவது மனத்தின் கிலேசத்தை, உடம்பின் கிலேசத்தை போக்குவதற்கு எம்பெருமானைச் சிந்திக்க வேண்டும்; நின்று சேவிக்க வேண்டும்; சிற்றடியை வந்திக்க வேண்டும்; வாழ்த்த வேண்டும்; அவனைச் சந்திக்க வேண்டும். சிந்திக்கிலேன் நின்று சேவிக்கிலேன் தண்டைச் சிற்றடியை வந்திக்கிலேன் ஒன்றும் வாழ்த்துகிலேன் மயில்வாகனனைச் சந்திக்கிலேன் பொய்யை நிந்திக்கிலேன் உண்மை சாதிக்கிலேன் புந்திக்கிலேசமும் காயக்கிலேசமும் போக்குதற்கே. புந்திக்கிலேசமும் காயக்கிலேசமும் போக்குதற்கு நான் சிந்திக்கவில்லையே! நின்று சேவிக்கவில்லையே! தண்டைச் சிற்றடியை வந்திக்கிலேன்; ஒன்றும் வாழ்த்துகிலேன்; மயில் வாகனனைச் சந்திக்கிலேன்; பொய்யை நிந்திக்கிலேன்; உண்மை சாதிக்கிலேன்' என்று எதிர்மறை வாயிலாக அருணகிரியார் சொல் 262