பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 வாழவேண்டும். அப்படியின்றி மனத்தினால் துக்கம் உண்டாகிற,ே உடம்பினால் துக்கம் உண்டாகிறதே என்றால் அது யாருடை குறை? "ஐயோ! புந்திக்கிலேசத்தையும், காயக்கிலேசத்தையும் போக்குவதற்கு நான் இப்படியெல்லாம் செய்யவில்லையே: என்று நாம் வருந்த வேண்டும். வருந்தத் தெரியாத நமக்கா, அருணகிரியார் தாம் வருந்துவது போல எதிர்மறை முகத்தால் நமக்கு ஒரு பேருபதேசத்தைச் செய்கிறார். சிந்திக்கி லேன்நின்று சேவிக்கி லேன், தண்டைச் சிற்றடியை வந்திக்கி லேன், ஒன்றும் வாழ்த்துகி லேன்; மயில் வாகனனைச் சந்திக்கி லேன்; பொய்யை நிந்திக்கி லேன்; உண்மை சாதிக்கிலேன்; புந்திக் கிலேசமும் காயக் கிலேசமும் போக்குதற்கே. (மனக்கவலையையும் உடல் துன்பத்தையும் போக்குவதற்கு, முருகனுடைய தண்டையை அணிந்த சிற்றடியை நான் நினைக்கவில்லை; நின்று சேவிக்கவில்லை; வணங்கவில்லை; சிறிதளவும் வாழ்த்தவில்லை; மயில்வாகனனாகிய அவனைத் தரிசிக்கவில்லை; பொய்யானவற்றை, வெறுக்கவில்லை; உண்மையானவற்றையே உறுதிப்படுத்தவில்லை. தண்டைச் சிற்றடியை முன்னும் கூட்டுக. வந்தித்தல் - வணங்குதல் கிலேசம் - துன்பம். காயம் - உடல். போக்குதற்குச் சிந்திக்கிலேன், சேவிக்கிலேன், வந்திக்கிலேன், வாழ்த்துகிலேன் என்று கூட்டிப் பொருள் கொள்க.) -