பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேலவன் போதித்த ஞானம் வழக்கமாக அருணகிரிநாத சுவாமிகளைப் பலபடியாகப் பாராட்டிக் கொண்டு வந்திருக்கிறோம். இன்றைக்கு அவரைக் கொஞ்சம் வையலாமென்று தோன்றுகிறது. அவர் முழுப் பொய்யர்; புரட்டர்; எப்பொழுதுமே சத்தியத்தைப் பேச வேண்டிய மகாத்மாக்கள் இப்படிப் பொய்ப் பேசலாமா? என்று தோன்றுகிறது. - பொய் கூறுபவர் யாரோ ஒருவர் மற்றொருவரிடத்தில் வந்து, "ஐந்து ரூபாய் பணம் இருந்தால் கொடுங்கள்' என்று கடன் கேட்கிறார். அதற்கு இவர், 'எனக்குச் சம்பளம் இன்னும் வரவில்லை. என் பையில் ஐந்து நயா பைசாவே இருக்கின்றன. அரிசி இல்லை. வாங்க வேண்டும். என்ன செய்வது என்று தெரியாமல் நான் உட்கார்ந் திருக்கிறேன். என்னிடம் பணம் இல்லையே!” என்று சொல்லுகிறார். இன்னும் கொஞ்ச நேரம் கழித்து அவருடைய சொந்தக்காரர் ஒருவர் வருகிறார். அவரோடு பேசிக்கொண்டிருக்கும்போது, 'உங்களுக்குத் தெரியுமா? என்னுடைய கதைக்கு ஆயிரம் ரூபாய் பரிசு கொடுத்திருக்கிறார்கள். செக்காகக்கூடத் தரவில்லை. நோட்டுக்களாகவே கையில் கொடுத்தார்கள். எல்லாம் ஐந்து ரூபாய் நோட்டுகள், இன்னும் செலவழிக்கவில்லை. அப்படியே வைத்திருக்கிறேன் பாருங்கள்' என்று தமக்கு வந்த பரிசை எடுத்துக் காட்டுகிறார். ஒருவரிடம் ஐந்து நயா பைசாக்கூட இல்லை என்று சொல்லிவிட்டு, ஐந்து ரூபாய் நோட்டுக்களாகவே ஆயிரம் ரூபாய் இருக்கிறது என்று மற்றொருவரிடத்தில் சொல் கிறவர், முன்னாலே ஒன்று சொல்லிப் பின்னாலே ஒன்று சொல் கிற பொய்யர் அல்லவா? அருணகிரியாரையும் அத்தகைய பொய்யர் என்று சொல்ல வேண்டும். எப்படி?