பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 அதுவும் இதுவும் சென்ற பாட்டிலே, "ஆண்டவனே மனத்திலே உண்டாகிய துக்கத்தையும், உடம்பிலே உண்டாகிற துக்கத்தையும் போக்தி; கொள்ள நான் உன்னைச் சிந்திக்கவில்லையே; நின்று சேவித்த வில்லையே; தண்டைச் சிற்றடியை வந்திக்கவில்லையே; உன் புகழ் ஒன்றையும் வாழ்த்தவில்லையே; உன்னைச் சந்திக்கவும் இல்லையே!' என்று வரிசையாக ஏழு தடவைகள் இல்லை, இல்லை என்று சொன்னார் அருணகிரியார் சொல்லி, ஐந்தாறு பாட்டுக்கள் தள்ளியாவது வேறு சொல்லக் கூடாதா? அடுத்த பாட்டிலேயே தமக்குக் கிடைத்திருக்கும் அற்புதமான அநுபவப் பரிசைச் சொல்கிறார். வரைஅற்று அவுணர் சிரம் அற்று வாரிதி வற்றச் செற்ற புரை அற்ற வேலவன் போதித்த வா!பஞ்ச பூதமும்அற்று உரைஅற்று உணர்வுஅற்று உடல் அற்று உயிர்அற்று உபாயம் அற்றுக் கரையற்று இருள்அற்று எனதுஅற்று இருக்கும்.அக் காட்சியதே. முன்பு படிப்படியாக இல்லை, இல்லை என்று சொல்லி வந்தவர், இங்கே தமக்குக் கிடைத்த பரிசுகளை அடுக்குகிறார். இவர் பேச்சு நான் முன்னாலே சொன்ன ஆசாமியினுடையது போல இருக்கிறது அல்லவா? அவரைப் பொய்யர் என்றால் இவரையும் பொய்யர் என்றுதானே சொல்ல வேண்டும்? அவர் வஞ்சகர் என்றால் இவரும் வஞ்சகரே அல்லவா? வேற்றுமை ஆனால் ஒரு வேற்றுமை இருக்கிறது. தம்மிடம் வந்து ஐந்து ரூபாய் கடன் கேட்ட ஏழையிடம் பணம் இல்லை என்று சொன்னவர், யாரிடம் இருக்கிறது என்று சொன்னார் அவரிடமே சொல்லவில்லை. வேறு ஒருவரிடம். அவர் தம்மைப் பணம் கேட்க மாட்டார் என்கிற நம்பிக்கையினால் தாம் பெற்ற பரிசைச் சொன்னார். அவரிடம் என்ன சொன்னார் என்று இவருக்குத் 286