பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேலவன் போதித்த ஞானம் தெரியாது. இவரிடம் என்ன சொன்னார் என்பது அவருக்குத் தெரியாது. ஆக, இருவரிடமும் தனித்தனியாக மற்றவர் காதில் படாமல் மாறுபாடாகச் சொன்னார். வெவ்வேறு மனிதருக்குச் சொன்ன வார்த்தை அவை. இது வஞ்சகம், பொய். அருணகிரி யாரை வஞ்சகர், பொய்யர் என்று திட்டுவதற்கு அவர் இத்தகைய பொய்யைச் சொன்னாரா என்று யோசித்துப் பாருங்கள். "சிந்திக்கிலேன், சேவிக்கிலேன், வந்திக்கிலேன், வாழ்த்து கிலேன்' என்று ஒருவரிடம் சொல்லிவிட்டு, 'வேலவன் அருளால் எனக்கு இது கிடைத்தது. அது கிடைத்தது' என்று வேறு மனிதரிடம் சொல்லவில்லை. தாம் சொல்பவை இரண் டையும் அடுத்தடுத்துச் சொல்கிறார்; வெளிப்படையாகச் சொல் கிறார்; ஒருவனுக்கு ஒன்றும், மற்றவனுக்கு வேறு ஒன்றும் இன்றி, யாவருடைய காதிலும் இவை இரண்டும் விழும் படியாகச் சொல்கிறார். இப்படிச் சொல்வதிலிருந்தே அது பொய் அன்று, புரட்டு அன்று, வஞ்சனை அன்று என்று நிச்சயமாகத் தெரிந்து கொள்ளலாம். அது ஒருவருக்கும் இது ஒருவருக்குமாக அருணகிரிநாத சுவாமிகள் சொல்லியிருந்தால் வஞ்சகந்தான். ஒரே கூட்டத்திற்கு இதையும் சொல்லி அதையும் சொல்கிறார். ஆகவே வஞ்சனை செய்த குற்றமென்று சொல்ல முடியாது. முரணா? அப்படியானால் மற்றொரு குற்றமாக இதைக் கொள்ளலாம். முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறவன் சித்தத் தெளிவு இல் லாதவன். அருணகிரிநாதர் அப்படி ஒருவேளை இருக்கலாமோ? அவரைப் பைத்தியம் என்று சொல்வதானால் அப்பெருமான் வாக்கிலே இத்தனை தொடர்பு இராது. பைத்தியம் முன் பின் னாகப் பேசும்; சொல்வது எதையும் தெளிவாகத் தொடர்ச்சியாகச் சொல்லாது; அதன் பேச்சிலே ஒரு வரையறை இராது. அருண கிரியார் கூறிய அந்தப் பாட்டு, அந்தக் கருத்துக்கு ஒட்டித் திருத்த மாக இருக்கிறது. இந்தப் பாட்டு இந்த அளவுக்குத் திருத்தமாக இருக்கிறது. ஆகவே, அவரைப் பைத்தியம் என்றும் நினைப் பதற்கு இல்லை. ஒருகால் முன்னொன்றும் பின்னொன்றும்,பேச்சில் ஒன்றும், பத்திரிகையில் ஒன்றுமாகக் கருத்தை வெளியிடுகிற அரசியல் 267