பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேலவன் போதித்த ஞானம் கட்டுவதில்லை. கட்டினாலும் கவர்ச்சி இராது. இடையிடையே மதிப்பில்லாத பச்சிலைகளையும் சேர்த்துப் பூக்களையும் வைத்துக் காட்டினால்தான் மாலை நன்றாக இருக்கும். தம்முடைய அநுபவத்தை மாத்திரம் சொன்னால், "அடேயப்பா இதற்கும் நமக்கும் வெகுதூரம்' என்று நாம் பயந்து போய் விடுவோம். 'கோயிலுக்குப் போகவில்லையே! இறைவனைத் தொழவில்லையே! அர்ச்சனை செய்யவில்லையே! வாழ்த்த வில்லையே!' என்று அவர் அழும்போது நாமும் அப்படிப் பண்ணாதவர்களாகையால், இவரும் நம்மைப் போன்றவர் என்கிற நினைப்பில், கூட உறவாடுகிறோம். அருணகிரியார், நாமும் தம்மைப் போல ஆக வேண்டும் என்ற கருணையுடையவர். ஆதலாலே, "இப்படி எல்லாம் இருந்த எனக்கு வேலனுடைய கருணையினால் எப்படிப்பட்ட ஞானம் உண்டாயிற்று, தெரியுமா?" என்று அதையும் சொல்லி ஆசையை மூட்டுகிறார். போன பாட்டிலே, 'கோயிலுக்குப் போகவில்லையே! ஆண்டவனைக் கும்பிடவில்லையே! அவனை வாழ்த்தவில்லையே! பொய்யை நிந்தித்து, மெய்யைக் கைக்கொள்ள வில்லையே!” என்று நமக்காக அழுதார். நாம் அந்த மாதிரியான சாதன வகை களை மேற்கொண்டோமானால் உண்டாகும் பயனை விளக்க, 'எனக்கு எத்தகைய இன்பம் உண்டாகும்படி வேலவன் செய் தான் தெரியுமா?' என்று இந்தப் பாட்டில் தம் அநுபவத்தைச் சொல்லி, முயன்றால் நாமும் அவ்வாறே அடையலாம் என்கிற நம்பிக்கையை ஊட்டுகிறார். குருவின் பெருமை உலகத்தில் இறைவன் திருவருளை நம்மால் நேரடியாகப் பெற முடியாது; குருநாதர் மூலமாகத்தான் பெற வேண்டும். திருமூலர் இதற்கு நல்ல உதாரணம் சொல்கிறார். பள்ளிக் கூடங்களில் பூதக் கண்ணாடியைக் கொண்டு பஞ்சை எரித்துக் காட்டுவார்கள். சூரியனுக்குமுன் பூதக்கண்ணாடியைப் பிடித்துக் கொண்டு அதன் வழியே கிரணங்கள் போய்ச் சேருமிடத்தில் பஞ்சை வைத்தால் பஞ்சு எரியும். பூதக் கண்ணாடிதான் பஞ்சை எரிக்கக் காரணம் என்று நாம் நினைக்கலாம். வேறிடத்தில் அது 269