பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 பஞ்சை எரிக்காது. சூரியன் முன்னால் காட்டும்போதுதான் அது பஞ்சை எரிக்கும். இறைவன் அருளால்தான் ஆன்மாக்கள் மும்மலங்களிலிருந்து விடுபடவேண்டும்; என்றாலும் இறைவன் அருள் நேரே பாயாது இறைவன் அருள் பூதக்கண்ணாடி போன்றது. மலத்தைச் சுட்டெரிக்க வேண்டுமானால் சூரியனுடைய கிரணங்களைப் போலக் குருவின் அருள் வேண்டும். குருநாதனாகிய சூரியன் தோற்றும்போது ஆன்மாக்களின் மலங்கள் இறைவன் அருளால் எரிந்து போகின்றன. "சூரிய காந்தமும் சூழ்பஞ்சும் போலவே சூரிய காந்தம் சூழ்பஞ்சைச் சுட்டிடா சூரியன் சந்நிதி யிற்சுடு மாறுபோல் ஆரியன் தோற்றமுன் அற்ற மலங்களே” என்கிறார் திருமூலர். பல பல காலங்களில் இறைவனே நேரே வந்து குரு நாத னாகச் சிலருக்கு உபதேசம் செய்திருக்கிறான். சனகாதி முனிவர் களுக்குப் பரமேசுவரன் தட்சிணாமூர்த்தியாக அமர்ந்து சின் முத்திரையினால் ஞானோபதேசம் செய்தான். சுந்தரமூர்த்தி சுவாமி களைத் தடுத்தாட் கொள்ளக் குருநாதனாக அவனே எழுந்தருளி னான். மாணிக்கவாசகப் பெருமானை மதுரையிலிருந்து திருப் பெருந்துறைக்கு வரச் செய்து ஆட்கொண்டான். ஞானகுருவாக வருகிறவர்கள் அனைவருமே இறைவனுடைய அம்சமேயாவார்கள் “அருபரத் தொருவன் அவனியில் வந்து குருபர னாகிய கொள்கையைச் சிறுமையென் றிகழாதே' என்பது மணிவாசகர் வாக்கு. முருகனே குரு பெரிய அவதார புருஷர்களுக்கு, இறைவனது அம்சம், பெற்ற மகான்களுக்கு, இறைவனே நேராக உபதேசம் செய்தமை யினால் அவர்கள் மிகுதியான ஞானத்தைப் பெற்றவர்களாக விளங்கினார்கள். அவர்கள் இறைவனிடத்திலிருந்து நேரே குரு 27Ο