பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 'போதித்தவாறு என்னே உபதேசம் செய்தவாறு என்னே: என்கிறார். எங்கே ஆச்சரியக் குறியைப் போடுகிறாரோ அங்கே தான் உண்மையான அருணகிரியார் பேசுகிறார். கந்தர் அவங்காரத் தின் முதல் பாட்டிலேயே, "பேற்றைத் தவம் சற்றுமில்லாத என்னை ப்ரபஞ்சம் என்னும் சேற்றைக் கழிய வழிவிட்ட வா!' "பிரபஞ்சச் சேற்றைக் கழிக்கும்படியாக வழிவிட்டவாறு என்னே: என்று ஆச்சரியப்பட்டுப் பேசினார். வேலவன் அருளினால் இன்பத்தை உண்ட அவருக்கு அதை நினைக்கும் போதெல்லாம் இத்தகைய ஏப்பம் வெளிவருவதைக் கண்டுதான், 'நம்மைப்போல் அழுதாலும் அவர் அழுமை நமக்காகத்தான்' என்கிற உண்மை தெரிந்து விடுகிறது. வரையற்று அவுனர் சிரமற்று வாரிதி வற்றச்செற்ற புரையற்ற வேலவன் போதித்தவா! இங்கே, 'எல்லை இல்லாத, கணக்கில்லாத அசுரர்கள் சிரம் அற்றுப்போகும்படியாகவும், சூரபன்மனுக்கு ஒளிய இடம் கொடுத்த வாரிதி - கடல் - சுவறிப்போகும் படியாகவும் குற்ற மற்ற வேலை விடுத்த வேலாயுதன் எனக்குப் போதித்தவாறு என்னே' என்று ஆச்சரியப்பட்டுக் கொட்டாவிவிட்டு நிற்கிறார் அருணகிரியார். வேலவன் என்ன போதித்தான்? அற்றது லாபமா? e பஞ்ச பூதமும் அற்று உரைஅற்று உணர்வு அற்று உடல் அற்று உயிர் அற்றுஉபாயம் அற்றுக் கரையற்று இருள்அற்று எனதுஅற்று இருக்கும் அக் காட்சியதே. காட்சி - ஞானம். குருநாதன் ஞானத்தைப் போதித்தான். அந்த ஞானம் எப்படி விளைந்ததென்று சொல்ல வருகிறார். லாபம் வந்தால், 'எனக்கு இது வந்தது, அது வந்தது என்று சொல் வோம். 'எனக்கு மனையாட்டி வந்தாள். எனக்கு அவளோடு ஒரு வைரமோதிரம் வந்தது, ஒரு வீடு வந்தது, மஞ்சள் காணி நாலு ஏக்கர் நிலமும் வந்தது' என்று வரக்கூடியவற்றை வரிசையாக 272