பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 "முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள் மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள் பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள் பெயர்த்தும் அவனுக்கே பிச்சி யானாள் அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள் அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தைத் தன்னை மறந்தாள்தன் நாமங் கெட்டாள் தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே” என்று அப்பர் சுவாமிகள் பாடுகிறார். பைத்தியத்தின் இயல்பு ஆனால் நமக்கு நான் நான் என்கிற நினைவு போகாத காரணத்தினாலே 'எனது எனது' என்று பல பொருள்களை எல்லாம் சேர்த்துக் கொண்டே இருக்கிறோம். தெருவில் கிடக் கும் காகிதங்களை, கிழிசல் துணிகளைச் சிலர் பொறுக்கிக் கொண்டு போகிறார்கள்; துருப்பிடித்த தகரங்களைப் பொறுக்கு கிறார்கள். அறிவுடைய மக்களால் ஒதுக்கப்பட்ட பொருள்களை அவர்கள் சேகரித்துக் கொண்டிருப்பதனாலே அவர்களைப் புத்தி கலங்கியவர்கள், பைத்தியங்கள் என்று பேசுகிறோம். ஆனால், நாம் எப்படி இருக்கிறோம்? நம்மைக் காட்டிலும் அறிவுடையவர்கள் என்று பாராட்டிப் பூசிக்கும் அருணகிரியார், ஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி சுவாமிகள், பட்டினத்து அடிகள் முதலிய அறிவுடைய அருட்பெருமக்களால் ஒதுக்கப்பட்ட பொருள்களை, 'எனக்கு எனக்கு' என்று போட்டி போட்டுக் கொண்டு, பேயாகப் பறந்து சேர்த்துக் கொண்டிருக்கிறோம். 'பெண் வேண்டாம், பொருள் வேண்டாம், மண் வேண்டாம்" என்று அவர்களால் எந்த எந்தப் பொருள்கள் வெறுத்து ஒதுக்கப் பட்டனவோ அவற்றையே பெரும்செல்வம் என்று எண்ணி மயங்கிச் சேர்த்துக்கொண்டிருக்கிறோம். நமக்குச் சம்பந்தம் இல்லாத பொருள்களைச் சேர்த்துக் கொள்வதைவிட அதிகமான கெடுதல் என்ன? நமக்குத் துன்பத்தைத் தருகிற பொருளைச் சேர்த்துக் கொண்டிருக்கிறோம். அவற்றைச் சேர்த்துக் கொள்வது தகாது என்று நமக்கு எப்படித் தெரியும்? நம்மைவிட அறி வுடைய மக்கள், அருளுடைய மக்கள் அவற்றை வேண்டாம் என்று தூக்கி எறிந்து விட்டார்கள். 276