பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேலவன் போதித்த ஞானம் "புள்ளியதோ லாடை புனைந்தரவப் பூணணிந்த வெள்ளிய செங்கண் விடையா னடிக்கமலம் உள்ளிய மெய்யன் புடையா ரருவருத்துத் தள்ளிய செல்வம்" என்கிற நினைப்பு நமக்கு இல்லை. அவற்றை நாம் பொறுக்கி மூட்டை கட்டுகிறோம். நாமும் ஒருவகைப் பைத்தியம் என்றுதானே சொல்ல வேண்டும்? இந்த உலகத்தில் பொருளைச் சேர்க்கும் பைத்தியம் பிடித்துத் துன்பப் பட்டு உழன்று கொண்டிருக்கும் நமக்குச் சுகம் விளைய வேண்டு மென்றால், துன்பம் அளிப்பவை எல்லாம் ஒவ்வொன்றாகப் போகவேண்டும். உலகமும் உடம்பும் உயிர் வாழ உடம்பு வந்திருக்கிறது. உடம்பு வாழ உலகம் வந்திருக்கிறது. உலகம் பஞ்சபூதக் கோட்டை அதில் உள்ள பஞ்சபூதக்கூடு உடம்பு. ஒரு பெரிய மாளிகை. அந்த மாளிகையில் நமக்காக ஓர் அறை வைத்திருக்கிறோம். மாளிகையில் நமக்கு வேண்டியவர்கள் நடமாடுகிற இடத்தில் நாமும் போவோம். ஆனால் நமக்காகத் தொழில்படும்போது நமது அறையில் இருப்போம். அம்மா சமையல் அறையில் இருப்பாள். அப்பாதம் அறையில் இருப்பார். இதுபோல நாம் நம்முடைய படிப்பு அறையில் இருப்போம். இப்படியே நாம் ஒவ்வொருவரும் பெரிய மாளிகையாகிய உலகத் தில் சிறிய சிறிய அறைகளாகிய உடம்புகளில் இருக்கிறோம். பிரபஞ்சம் என்பது மண் கோட்டை. நம்மைப் போல உடம்பு எடுத்த பிராணிகள் நடமாடிக் கொண்டிருக்கிற இடம் பிரபஞ்சம். பிரபஞ்சம், உடம்பு ஆகிய இரண்டுமே பஞ்சபூதங் களால் ஆனவைகளே. பஞ்ச பூதங்களின் சேர்க்கையினால் பெரிய அளவில் கட்டப்பட்ட கோட்டை பிரபஞ்சம். சின்ன அளவில் கட்டப்பட்ட வீடு உடம்பு. பெரிய கோட்டையினுள், சின்ன வீட்டில் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது. 277