பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 பூதங்கள் அற்றன - ஒரு பெரிய கோட்டைக்குள் இருக்கும் சின்ன அறை ஒன்றில் உள்ள ஒருவனை விடுவிக்க வேண்டுமென்றால் அதே கோட்டைக்குள் மற்றோர் அறையில் இருப்பவனால் முடியாது. அறைக்கு அப்பால், கோட்டைக்கும் அப்பால் உள்ள ஒருவன் தான் முதலில் வெளியில் இருக்கும் கோட்டை மதில்களை உடைத்துவிட்டு உள்ளே வந்து, அவன் அடைபட்டுக் கிடக்கும் சிறையையும் இடித்துத் தள்ளி அவனை விடுவிக்க முடியும். அப்படி உயிருக்குப் பஞ்சபூத வாசனை போகவேண்டுமென்றால், பஞ்ச பூதங்களுக்கு அப்பாற்பட்டவனாக இருக்கிற இறைவனின் துணை வேண்டும். "ஆண்டவனே! நீ எனக்குச் செய்த பேருபகாரத்தை நான் மறந்து விடுவேனா? பிரபஞ்ச வாசனை, பஞ்ச பூதங்களின் வாசனை என்னை விட்டுக் கழியும்படியாகச் செய்தாயே! பிரபஞ்சச் சேற்றைக் கழிய வழிவிட்டவாறு என்ன' என்று கந்தர் அலங்காரத்தின் முதல் பாட்டிலேயே பிள்ளையார் சுழியாக, இதைத்தான் போட்டார் அருணகிரியார். சண்முகநாதனின் அருளால் அவருக்குப் பஞ்ச பூதங்களின் வாசனை அற்றுப்போய்விட்டது. சித்திரை மாதத்து வெயில் பொறி பறக்கும்படியாக எரித்துக் கொண்டிருந்தாலும் செருப்புப் போட்டுக் கொண்டு போவா னுக்குக் காலில் சூடு உறைக்காது. அப்படியே அகண்டம் முழுவதும் பஞ்ச பூதங்களின் வாசனை இருந்தாலும் இறைவன் ஞானம் போதித்ததனால் அருணகிரியார் அளவில் பஞ்ச பூதங்களில் வாசனை அற்றுப் போய்விட்டது. "பஞ்ச பூதமும் அற்று' பஞ்ச பூதங்களின் வாசனை - சேறு - அற்றுப்போய் விட்டது. அடுத்தாற்போல இருப்பது உடம்பு. உரை அறுதல் உள்ளே அரவம் கேட்டால் யாரோ ஆசாமி இருக்கிறான் என்பது தெரிகிறது. கை, கால்கள் எல்லாம் இருந்தாலும் உடம்பு எடுத்திருக்கும் பிராணிகளுக்கு இல்லாத ஒன்று மனிதனுக்கு இருக்கிறது. அதுதான் உரை;பேச்சு, பேச்சுச்சத்தம் வருவதி 278