பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேலவன் போதித்த ஞானம் விருந்தே உடம்பு இருப்பதை அறிந்து கொள்ளலாம். காக்கை கரைகிறது, மாடு கத்துகிறது, நாய் குரைக்கிறது என்றாலும் உடம்புடைய உயிர் இனங்கள் எல்லாவற்றையும்விட வாயாடி மனிதன் தான். அவற்றுக்குத் தம் கருத்தைச் சொல்லாக மாற்றக் கூடிய ஆற்றல் இல்லை. அந்த ஆற்றல் படைத்த மனிதன்தான் பேசுவதற்கு வாயை நன்றாகப் பயன்படுத்திக் கொள்கிறான். "அதிகமாகப் பேசாதே. பேச்சைக் குறைத்துக் கொள்' என்று எத்தனை நாள் பெரியவர்கள் சொன்னாலும் கேட்காமல் தோன்றியபடி எல்லாம் பேசித் துன்பத்தை அநுபவிக்கிறான். மனிதனுக்குத் துன்பம் தருகிற கருவிகளில் எதை அடக்கி னாலும் அடக்காவிட்டாலும் நாக்கை அடக்க வேண்டும். இல்லா விட்டால் சொல் இழுக்குப்பட்டுத் துன்புறுவான். "யாகாவார் ஆயினும் நாகாக்க, காவாக்கால் சோகாப்பர் சொல்இழுக்குப் பட்டு' என்கிறார் திருவள்ளுவர். நாக்கை அடக்கிக் கொள்ளத் தெரியாமல் வாய்கிழிய, தொண்டை கிழிய உலகம் முழுவதும் கேட்கவேண்டும் என்று பேசுகிறான் மனிதன். பேச்சின் ஒலியை அதிகப்படுத்தும் கருவியை வேறு உபயோகித்துக் கொண்டு பேசுகிறான். பேசினாலும் பேசாவிட்டாலும் அவன் கருத்தை உள்ளே இருக்கிற ஆண்டவன் கேட்பான். அவனுக்கு ஒலிபெருக்கியில் பேசினால்தான் கேட்கும் என்பது இல்லை. கோபம் வரும்போது இரைந்து பேசுகிறோம். அன்பு விளையும்போது மெல்லப் பேசு கிறோம். மனையாட்டியிடத்தில் மனிதன் கொண்டுள்ள அன்பு நுட்பமானது. அந்த அன்பின் வெளியீடாகிய உரையும் அவ ளோடு பேசும் போது மெல்ல, பிறர் காதில் விழாமல் வெளிப் படுகிறது. மந்திரங்களையும் பிறர் காது கேட்க உச்சரிப்பது இல்லை. 'நாவியல் மருங்கில் நவிலப்பாடி' என்பர். நாக்கின் அசைவினாலே மந்திரத்தை உச்சரிக்க வேண்டுமே தவிர, பிறர் காதில் விழும்படியாகச் சொல்லக் கூடாது. மனையாட்டியிடத்தில் காதல் மீதூர்ந்து பேசுகையில் க.சொ. V- 19 279