பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேலவன் போதித்த ஞானம் சாதனமும் சாத்தியமும் பிரபஞ்ச வாசனை போன பிறகு, உரை போய், உணர்வு போய், உடலும் போய், உயிரும் போன பிறகு, ஜீவபோதம் கழன்ற பிறகு, சாதனத்திற்கு வேலை இல்லாமல் போய்விட்டது. சாதகன் திருப்புகழ் படிக்கிறான். ஆறுபடை வீடுகள் எல்லாம் தரிசனம் செய்து வருகிறான்; தினமும் காலையில் குளித்து விட்டுப் பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வந்து, 'முருகா முருகா என்று வாழ்த்துகிறான்; தண்டைச் சிற்றடியை வந்திக் கிறான்; தியானம் செய்கிறான்; இத்தகைய சாதன வகைகளினால் முடிந்த முடிபாகிய சாத்தியத்தை அடைந்த பிறகு இவற்றுக்கு வேலை என்ன? சென்னையில் இருக்கும்போது ஒருவர் எப்போது பார்த்தா லும் கையில் விசிறியோடு இருப்பார். குற்றாலத்துக்கு அவர் போகிறார். ஒரே தென்றல் காற்று. சிலுசிலு என்று மழை பெய்து கொண்டே இருக்கிறது. அங்குமா அவர் கையில் விசிறியை வைத்துக் கொண்டிருப்பார்? தென்றல் அடிக்கும் வரையில்தான் அது வேண்டும். தென்றல் காற்று வீச ஆரம்பித்தவுடன் விசிறிக்குத் தேவை இல்லை. சாதன வகைகளினாலே முடிந்த முடிவாகிய இன்பத்தைப் பெற்றவர்களுக்கு உபாயங்கள், சாதனங்கள் தேவை இல்லை என்று ரமண மகரிஷி சொல்கிறார். குளிர் தேசத்தில் இருக்கும்போது ஒருவன் கம்பளிச் சட்டை, கம்பளிக் குல்லா, கம்பளி மப்ளர் முதலியன அணிந்து கொண் டிருந்தான். வெப்பப் பிரதேசத்திற்கு வந்த பிறகு அவற்றுக்கு என்ன வேலை? எல்லாவற்றையும் கழற்றி எறிந்துவிட்டான். எல்லா விதமான கம்பளிப் போர்வைகளும் அற்றுப் போய்விட்டன. அப்படி, "எங்கள் ஆண்டவன் ஞானாக்கினி தந்தான். குளிர் போயிற்று. பிரபஞ்ச வாசனை அற்றது. வாங்மெளனம் உண்டா யிற்று. மனோ மெளனம் உண்டாயிற்று. காஷ்ட மெளனமும் உண் டாயிற்று. இதுவரைக்கும் உபாயம் தேவைப்பட்டது. ஜீவபோதம் கழன்ற பிறகு எனக்கு உபாயமும் அற்றுப்போய்விட்டது; தேவை இல்லாமல் போய்விட்டது” என்கிறார் அருணகிரியார். நிலத்தைப் பயன்படுத்தி, உழுது, விதைத்து, களை எடுத்து, கதிர் அறுத்து, போரடித்து, நெல்லை வீட்டுக்குக் கொண்டு வந்து 233