பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 என்று இதைச் சொல்வர். இருட்டில் இருப்பவனுக்கு இது இருட்டு' என்று எப்படித் தெரியும்? ஒளிக்கு வரும் போதுதான் இருட்டுத் தெரியும். ஞானம் தோன்றும்போதுதான் அஞ்ஞானம் புலப்படும். எனது அறுதல் ஜீவபோதம் கழன்ற பிறகு அஞ்ஞான இருள் அகன்று எல்லையற்ற பேரின்ப ஞான ஒளியில் கலக்கும்போது என்ன ஆகிறது? எனது அற்று இருக்கும் அக்காட்சியதே. 'என்னுடைய அறிவு என்னுடைய ஆத்மா என்கிற நினை வும் கடைசியில் போய் விடுகிறது. எனது' என்கிற மமகாரம் போய்விட்டது. அகங்காரமாகிய நானும் போயிற்று. இதுவரை யில் ஆண்டவன் வேறு நான் வேறு என்கிற தன்மை இருந்தது. இப்போது அதுவும் ஒழிந்து போய், நான் வேறு அவன் வேறு எனாது இரண்டும் ஒன்றாய்ப் போய்விடுகின்றன. "நான்வேறு எனாதிருக்க நீ வேறு எனாதிருக்க அருள்வாயே" என்று திருப்புகழில் பிரார்த்தனை செய்தார். அது ஈடேறிவிட்டது. அஞ்ஞான மயமாகிய உலகம் இருள் மண்டிக் கிடக்கிறது. இறைவனுடைய அருள் மயமான உலகத்தில் ஞான ஒளி வீசு கிறது. கரை இல்லாத அப்பிரதேசத்தில் இருள் இல்லை. எனது, நான் என்பதற்கும் வேலை இல்லை. பிரபஞ்சவாசனை போன பிறகு, வாக்குக்கு அகப்படும் உரை போன பிறகு, ஐம்பொறி களின் எல்லைக்கு உட்படும் உணர்வு போன பிறகு, சரீர வாசனை போன பிறகு, ஜீவபோதம் கழன்ற பிறகு, எல்லையில்லாத, கரை இல்லாத, ஞான ஒளியமான எம்பெருமானின் இராசதானியில், அருள் உலகத்தில் 'எனது. நான் என்கிற அகங்கார மமகாரம் போய்விடுகின்றன. "எல்லாம்அற என்னை இழந்த நலம்" என்று இதைத்தான் அநுபூதியில் பேசினார். 'எல்லாம் அற என்னையும் இழக்கும்படியான ஞானத்தை எனக்குப் போதித் தானே; அக்காட்சியை - ஞானத்தை - அந்த ஞான மூர்த்தி 286