பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 வாரிதி வற்றச் செற்ற. - வாரிதி - கடல். கடல் வற்றும்படியாகச் செய்து, அகங்கா உருவமுள்ள சூரனைச் சங்காரம் செய்து உலகத்திற்கு இன்பத்தை உண்டாக்கியது அந்தப் புரையற்ற வேல். அந்த வேலை உடைய பெருமான் எனக்குப் போதித்த அக்காட்சி, அந்த ஞானம் என்ன தெரியுமோ? பிரபஞ்ச வாசனை அற்றுப் போகும்படியாக, வாங் மெளனம் உண்டாகும்படியாக, மனோ மெளனம் உண்டாகும் படியாக, காஷ்ட மெளனம் உண்டாகும்படியாக, ஜீவபோதம் கழன்று போகும்படியாக, எல்லா விதமான உபாயங்களும் அற்று, எல்லையற்ற ஒளிமயமான தன் இராசதானியில், எனது என்பதும் அற்றுப்போய், நானும் கரைந்து போகும்படியாக அல்லவா ஞானோபதேசம் செய்தான்? அத்தகைய உயர்ந்த ஞானத்தை அவன் போதித்தவாறு என்னே சூரனுக்குத் துணை யாய் நின்ற எண்ணிக்கையற்ற அவுணர் சிரமற்றுப் போகும்படி யாகச் செய்தவன், நான் என்கிற அகங்காரத்துக்குத் துணையாக அதைச் சுற்றிச் சூழ இருக்கிற எனது என்னும் மமகாரத்தை அழிந்து போகச் செய்தான். சூரனுக்கு ஒளிய இடம் கொடுத்த வாரிதி வற்றிப் போகும்படியாகச் செய்தவன், நான் என்கிற எனது அகங்காரத்துக்கு உறைவிடமான பிறவிப் பெருங்கடல் வற்றிப் போகும்படியாக உபதேசித்தான். இவ்வாறு பரவசமுற்றுப் பேசுகிறார் அருணகிரியார். நம்மைப் போல அழுதாரே என்று அவரோடு சென்ற பாட்டிலே சேர்ந்து கொண்ட நமக்கு, அவரைப் போலவே முயன்றால் இத்தகைய இன்ப நலங்கள் விளையும் என்கிற நம்பிக்கை இப்போது உண்டாகவில்லையா? வரைஅற்று அவுணர் சிரம்அற்று வாரிதி வற்றச்செற்ற புரைஅற்ற வேலவன் போதித்த வாபஞ்ச பூதமும் அற்று உரைஅற்று உணர்வுஅற்று உடல்அற்று உயிர் அற்று உபாயமற்றுக் கரைஅற்று இருள்அற்று எனதுஅற்று இருக்கும்.அக் காட்சியதே. 283