பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேலவன் போதித்த ஞானம் (ஐந்து பூதங்களும் அற பேச்சு அற, பொறிகளின் உணர்ச்சி அற, சரீர உணர்வு அற, ஜீவபோதம் அற, சாதனம் அற, எல்லையற,அஞ்ஞான இருளற, மமகாரம் அற்று இருக்கும் அந்த ஞானத்தை, மலை அழியவும் அசுரர்களின் சிரங்கள் அறவும் கடல் வற்றவும் அழித்த குற்றமற்ற வேற் படையையுடைய முருகன் அடியேனுக்கு உபதேசித்தவாறு என்னே! காட்சியது போதித்தவா என்று கூட்டுக. அற்று என்று வந்த எச்சங்களிற் சில அற என்ற பொருளில் வந்தன. அவுணர் - அசுரர். வாரிதி - சூரன் புகுந்த கடல், புரை - குற்றம். போதித்தவா. வியப்பு. உபாயம் - சாதனம். காட்சி - ஞானம் . காட்சியது: அது, பகுதிப் பொருள் விகுதி.) - 289