பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிகலங்கள் அருணகிரிநாதப் பெருமான் முருகன் புகழோடு அவர் தகப்பனார் மாமனார் ஆகிய இரண்டு பேர்களுடைய புகழையும் சேர்த்து ஒரு பாட்டில் சொல்ல வருகிறார். அவர் யாரைச் சொன்னாலும் - சிவபெருமானைச் சொன்னாலும், திருமாலைச் சொன்னாலும் - புகழ்படப் பேசுவாரேயன்றி இழிவாகச் சொல் லும் வழக்கம் அவரிடம் இல்லை. அந்த வகையில் இந்தப் பாட்டில், முருகனுக்கு அணிகலன்களாக விளங்குவதைச் சொல்ல வருபவர், அதற்கு முன் சிவபெருமானுக்கு அணிகலனாக விளங்குவதையும், திருமாலுக்கு அணிகலனாக விளங்குவதையும் சேர்த்துச் சொல்கிறார். சிவபிரானுக்கு அணிகலம் அழகுக்கு அழகு செய்கிற பொருள், அணிகலம். ஒரு நங்கைக்கு வைர ஆபரணங்களும், பொன் நகைகளும் பூட்டினால் அவளுடைய அழகைப் பின்னும் அவை அழகு படுத்துகின்றன. முருகப்பெருமானுடைய தந்தையாகிய சிவபெருமானுக்கு அழகு செய்கிற அணிகலம் எது? அவனுடைய மாமனார் திருமாலுக்கு அழகு செய்கிற அணிகலம் எது? அவனுக்கும், அவன் கை வேலுக்கும் அணிகலன்களாக விளங்குவன எவை? - இவற்றைக் கூற வருகிறார் அருணகிரியார். ஆலுக்கு அணிகலம் வெண்டலை மாலை ஆல் - ஆலமரம், இங்கே அது ஆகுபெயராய்க் கல்லால மரத் தடியில் உட்கார்ந்து சனகாதி முனிவர்களுக்கு ஞானம் போதித்த தட்சிணாமூர்த்திக்கு ஆயிற்று.'முசிரி பாடுகிறார் என்கிறோம். முசிரி பாடுமோ? அங்கே,முசிரி என்ற ஊரில் இருந்து வந்திருப்ப வருக்கு அச்சொல் ஆயிற்று. சங்கீத வித்துவான்களில் சிலரை அவர்களுடைய ஊரினால் குறிப்பிடுவது வழக்கமாக இருக்கிறது. அந்த ஊர் அங்கே பிறந்தவருக்கு ஆயிற்று. இதை இட ஆகு