பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 என்று மீனாட்சியம்மையைப் பாடுகிறார். புவனம் கடந்து நின்ற பரமசிவம், பஞ்சபூதங்களுக்கு அப்பாற்பட்டவராக இருப்பவர். எம்பெருமாட்டியை உயிருள்ள சித்திரமாகத் தம் உள்ளக் கிழியில் அழகு ஒழுக எழுதிப் பார்த்துக் கொண்டிருக்கிறார்; பராசக்தியைத் தம்முடைய தியான மூர்த்தியாக உள்ளத்தில் பிரதிஷ்டை பண்ணிக் கொண்டு தவம் செய்கிறாராம். நாம் மோட்சத்தை விரும்பி, அதனை அளிக்கும் இறை வனை நினைத்துத் தவம் செய்கிறோம். நமக்கு முத்தியை வழங்குகிற பொருளே எம்பெருமாட்டியை நினைந்து, தனக்கு முத்தி வேண்டுமென்று தவம்செய்கிறதா? அவர் தவத்தைச் செய்வது எதற்காக? ஒரு பணக்காரனிடத்தில் சென்று ஏவலாளன் ஒருவன் நின்றால் பண உதவியை விரும்பியே நிற்பான். அல்லது வேறு ஏதாவது லட்சிய சித்தியை நாடித்தான் போவான். எல்லாராலும் வணங்குவதற்குரிய பொருள், எல்லாராலும் நினைந்து தவம் செய்வதற்குரிய பொருள், பராசக்தியை நினைந்து, அவளது பச்சை மரகத மேனியின் அழகு உள்ளத்தில் ஒழுக எழுதிப் பார்த்துக் கொண்டு தியானம் செய்யக் காரண்ம் என்ன? அவர் தமக்காக வேண்டக் கூடிய பொருள் ஒன்றுமே இல்லையே! பெரியவர் இயல்பு எப்போதுமே பெரியவர்கள் எதை வேண்டினாலும் தங்களுக் காக வேண்டமாட்டார்கள். ஒரு தாய் தன் குழந்தையை அழைத்துக் கொண்டு வேறு ஊருக்குப் போகிறாள். சாப்பாட்டு நேரம். அவ ளுக்குப் பசிக்கிறது. ஒரு வீட்டில் நுழைகிறாள். சோறு வேண்டும் என்று கேட்கிறாள். தனக்காக அன்று. 'இந்தக் குழந்தைக்கு மாத்திரம் கொஞ்சம் சாதம் போடுங்கள்' என்று வேண்டுகிறாள். தனக்கு எதையும் வேண்டாமல் தன் குழந்தைக்காக அவள் வேண்டுகிறாள். இதுதான் தாய் அன்பு. இப்படியே பெரியவர்கள் எந்த முயற்சி செய்தாலும், ஆண்டவனிடத்தில் எதை வேண்டிக் கொண்டாலும் தாம் வாழவேண்டுமென்று வேண்டிக் கொள்ள மாட்டார்கள்; உலகம் வாழவேண்டுமென்று வேண்டிக் கொள் als stffé953)T. 292