பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 மோன ஞானத் தவக்கோலம் புனைந்து கொண்டார். முருகனைப் பற்றிச் சொல்ல வரும்போது அவனுடைய திருவவதாரத்துக்கு முன் சிவபிரான் கொண்ட கோலத்தை நினைப்பது பொருத்த மல்லவா? ஆதலின், ஆலுக்கு என்று ஆரம்பிக்கிறார். ஆலமரத்தடியில் இருக்கிற தட்சிணா மூர்த்திக்கு அணிகலனாக இருப்பது எது? ஆலுக்கு அணிகலம் வெண்தலை மாலை. வெண்தலை - கபாலம், தசை இல்லாமல் வெறும் எலும் பாய் வெள்ளையாய் இருக்கிற தலை ஒடு. சிவ பெருமானுக்கு அலங்காரம் கபால மாலையாம். வெண்டலை மாலை அணிகலமா? எடுத்தவுடனேயே நாம் பயப்படும்படியாக, "நம்முடைய சுவாமியின் அப்பாவுக்கு நகை எது தெரியுமா? ஆலமரத்தடியில் இருக்கிற அவருக்கு ஆபரணம் கபால மாலை, மண்டை ஒட்டு மாலை' என்கிறார். 参 "என்ன ஐயா வேடிக்கை செய்கிறீரா? மண்டை ஓடு எப்படி ஆபரணமாகும்? இருக்கிற அழகை அதிகப்படுத்தி, பார்ப்பதற்குக் கவர்ச்சியையும் விருப்பத்தையும் உண்டாக்குவது அல்லவா ஆபரணம்? மண்டை ஒட்டு மாலையைக் கண்டாலே எல்லோ ரும் அஞ்சிப் போவார்களே. அதை ஒரு பெரிய ஆபரணம் என்று சொல்ல வந்துவிட்டீர்களே' என்று நாம் அருணகிரியாரைக் கேட்கலாமா? கொழுகொழு என்று இருக்கிற குழந்தைக்குக் காலில் தண்டை கொலுசு, கையில் காப்பு மோதிரம் எல்லாம் போட்டால் மிக அழகாக இருக்கின்றன. அவை குழந்தைக்கு இருக்கிற அழகை அதிகப்படுத்துகிற அணிகலன்கள். வெண் தலை மாலை சிவபெருமானுடைய அழகை மிகுதிப்படுத்துகிறதா? அக அழகு சிவபெருமானுக்கு இருக்கிற அழகு என்ன? புற அழகா? ஆள் ராஜாவைப்போல இருப்பது மாத்திரம் அழகு அன்று. அப்படிப்பட்ட உடம்புகளுக்குக் கல் நகை, பொன் நகை ஆபரணமாக இருக்கலாம். ஆனால் இவர் ஞானமூர்த்தி. 294