பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிகலங்கள் "இக்கு முல்லையுடன் பற்றாக்கை யும்வெந்து சங்க்ராம வேளும் படவிழியாற் செற்றார்” - ஞான மோனத் தவப் பெருமான். அவருடைய தவ ஞான ஒளியே அவருக்கு அழகு. உலகுக்கு ஆதியாகவும் அந்தமாகவும் இருப்பவர் அவர் உலகம் எல்லாம் அழிந்தாலும் தாம் மாத்திரம் அழியாத வராக, நித்தியமாக இருப்பவர். நித்திய கல்யாணியை மணந்து கொண்டு என்றைக்கும் நித்தியமாகப் பூரண ஆனந்தமயமாக விளங்குகின்ற அந்தச் சச்சிதானந்த உருவத்தினருக்கு அழகு செய்கிற அணிகலன், அந்த நித்தியத் தன்மையைக் காட்டுகிற ஆபரணமாக இருக்க வேண்டும். ஆபரணம் என்பது கண்ணுக்கு அழகாகவும் இருக்கலாம்; கருத்துக்கு அழகாக இருப்பதும் ஆபரணந்தான். ஒருவன் ஓர் அலுமினிய மெடல் போட்டிருக்கிறான். மற்றொருவன் நான்கு சவரனில் ஒரு மெடல் அடித்துப் போட்டுக் கொண்டிருக்கிறான். கண்ணுக்கு அலுமினிய மெடலைவிடத் தங்க மெடல் அழகாகத் தோன்றலாம்; விலை உயர்வானதாக இருக்கலாம். ஆனால் கருத்தினாலே பார்க்கும்போது அலுமினிய மெடல் அவனுக்கு எப்படிக் கிடைத்தது என்று ஆராய்ச்சி பிறக்கும். போர்க்களத்தில் அவன் காட்டிய வீரத்திற்காக வழங்கிய விருது அது. அந்த மெடல் அவன் காட்டிய வீரத்தைக் காட்டுகிறது. தங்க மெடல் அணிந்தவன் பணம் இருப்பதனால் அதை வாங்கிப் போட்டுக் கொண்டிருக்கிறான். பணம் இருந்தால் அதேமாதிரியான மெடலை எல்லோரும் வாங்கிப் போட்டுக் கொள்ளலாம். ஆனால் அலுமினிய மெடலைப் பெற வேண்டுமானால் போரில் அவன் காட்டியது. போன்ற வீரத்தைக் காட்டி வெற்றி பெற்றால்தான் முடியும்; வேறு வகையில் பெற முடியாது. இப்படிக் கண்ணுக்குத் தாழ் வாகத் தோன்றும் ஒன்று, கருத்தினாலே பார்க்கும் போது உயர் வாகத் தோன்றும். நித்தியப் பொருள் உலகம் எல்லாம் நிலையாமையை உடையது, அநித்திய மானது என்பதை ஒவியத்தில் காட்ட வருகிறான் சித்திரக்காரன். ஒர் அழகான பெண்ணின் படத்தை எழுதி அதன் அடியிலேயே க.சொ.IV-20 295