பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 ஒரு மண்டை ஒட்டையும் இரண்டு எலும்புகளையும் எழுதி வைக்கிறான். 'அழகான பெண்ணைப் பார்த்து மயங்கி நிதி கிறாயே! முடிவில் அவள் கீழே இருக்கிற எலும்பாகி விடுவாள் என்பதை மறந்துவிடாதே என்பதை அப்படம் நமக்கு நினை வுறுத்துகிறது. ஒவியன் ஒரு பெரிய மாளிகையைப் போட்டிருப் பான்; அதன் அடியிலே ஒர் ஒட்டையும் போட்டிருப்பான். அப்படிப் போடுவதால் அதன் அழகு கெட்டுவிட்டதே என்று நினைக்கலாமா? ஒரு சொற்பொழிவின் பொருள் அதில் இருக் கிறது. மாடமாளிகையில் வாழ்ந்தாலும் ஒடு எடுக்கும் காலம் வரும் என்பதைச் சொல்லாமல் சொல்கிறது படம். இப்படி வண்ண ஒவியத்தில் கருத்துக்கு ஆபரணமாகிய பல குறிப்புக்கள் உண்டு. அருணகிரியாரின் இந்தச் சொல் ஒவியத்தில் கருத்துக்குப் புலப்படும் குறிப்புக் கபால மாலையில் இருக்கிறது. 'சிவ பெருமான் அல்லாத பொருள் எல்லாம் செத்துப் போவன. அவர் ஒருவரே நித்தியமானவர், சத்தியமானவர்' என்ற கருத்தைச் சாட்சியோடு சொல்கிறார். மண்டை யோட்டின் குறிப்பு ஆலுக்கு அணிகலம் வெண் தலை மாலை என்கிறார். மண்டையோடு மனிதனது நிலையாமையைக் காட்டுகிறது. இறைவர் சாமான்ய மனிதருடைய வெண்டலை மாலையை அணிந் திருக்கவில்லை. பிரமதேவன் முதலிய தேவர்களின் கபாலங்களை அணிந்திருக்கிறார். உலகம் எல்லாம் அநித்தியம் என்பது கிடக்கட்டும். இந்த உலகத்தைப் படைக்கிற பிரமனே அநித்தியம் என்பதை அந்த மண்டை ஒடுகள் காட்டுகின்றன. அவை பிரம கபாலங்கள். பிரமாவே செத்துப் போகிறான் என்றால் அவன் படைத்த படைப்பு எங்கே நிலைத்து நிற்கப் போகிறது? பலபல படைப்பு களைக் கணந்தோறும் உண்டு பண்ணும் பிரமா ஒருவன் அல்ல. பிராமாவுக்கும் வயது உண்டு. அவனுக்குரிய கணக்கில் நூறு பிராயம் அவன் வாழ்வான். அவன் போல் மற்றொரு பிரமா வரு வான். இப்படி வந்து போய்க்கொண்டே இருக்கிற பிரமாக்களின் 296