பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிகலங்கள் தபாலங்களே ஆண்டவனது கழுத்தில் பெரிய மாலையாகத் தொங்குகின்றன. பிரமாவினால் படைக்கப்பட்ட மக்களாகிய நாம் ஏதோ என்றைக்கும் சத்தியமாக நித்தியமாக நிலைத்து நிற்கப் போகிறவர்களைப் போல எண்ணிக் கொண்டு வாழ்ந்து வருகிறோம்; நம்மைப் படைக்கிற அப்பனாகிய பிரமாவே அநித்தியமானவன் என்று தெரிந்து கொள்வதற்காகச் சிவபெரு மான் பிரமாக்களின் தலைமாலையை அணிந்து கொண்டிருக் கிறான். அந்த மாலையை நினைக்கும்போது மற்றப் பொருள் களின் நிலையாமை தெரிவதோடு அதை அணிந்திருக்கும் சிவ பிரான் ஒருவரே நித்தியமானவர் என்ற உண்மையும் விளங்கு கிறது. வெண்தலை மாலை அவனது நித்தியமான தத்துவத்தை விளங்க வைக்கும் மெடல். அவன் அல்லாத மற்றப் பொருள்கள் எல்லாம் அநித்தியமானது என்பதை உணர்த்தும் மெடல். வெளிப்பார்வைக்குக் கவர்ச்சி அற்றதாகத் தோற்றினாலும், கருத்தினால் பார்க்கும்போது அணிந்தவனது வீரச்சிறப்பைப் புலப்படுத்தும் அலுமினிய மெடலைப் போன்றது. அது. வீரன் ஒருவனுடைய உடம்பெல்லாம் புண்ணாய் இருக்கிறது. அந்தப் புண்கள் எப்படி ஏற்பட்டன? சொறி சிரங்கினால் புண் உண்டானால் அது அருவருக்கத் தக்கது. ஆனால் வீரன் மார்பிலே உள்ள புண் அவனது வீரச்சிறப்பைக் காட்டுகிற அடையாளம். அது அவனுக்கு அழகு "சுரதந் தனில்இளைத்த தோகை, சுகிர்த விரதந் தனில்இளைத்த மேனி - நிரதம் கொடுத்திளைத்த தாதா கொடுஞ்சமரிற் பட்ட வடுத்துளைத்த கல்அபி ராமம்' என்று ஒரு பாட்டு உண்டு. பார்வைக்கு அழகற்றனவாகத் தோன் றினாலும் உண்மையில் அழகாக இருப்பவற்றை அந்தப் பாட்டுத் தொகுத்துச் சொல்கிறது. கொடும்சமரில் பட்ட வடு. அபிராமம்' என்று அதில் வருகிறது. போரிலே பட்ட வடு வீரனுக்குப் பேரழகாம். ஒரு சோழனை, தொண்ணுற்றாறு புண் கொண்ட சோழன் என்று பொற்றினார்கள். 297