பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிகலங்கள் "உய்ய வுலகுபடைத் துண்ட மணிவயிறா ஊழிதொறுழிபல ஆலி னிலையதன்மேல் பைய வயோகுதுயில் கொண்ட பரம்பரனே பங்கய நீள்நயனத் தஞ்சன மேனியனே செய்யவள் நின்னகலம் சேம மெனக்கருதிச் செல்வு பொலிமகரக் காது திகழ்ந்திலக ஐய எனக்கொருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே." (பெரியாழ்வார் - செங்கீரைப் பருவம்) உலகம் எல்லாம் உய்யும்படியாகப் படைத்து, எல்லா வற்றையும் உண்ட மணி வயிறு உடையவனாக இருக்கிறான் அவன். தான் படைத்த உலகம் முழுவதையும், பல பல இன்னல் களுக்கும் அல்லல்களுக்கும் ஆளாகிக் களைத்து அலுத்துப் போய்க் கிடக்கிற உலகம் அத்தனையையும், ஊழிக் காலத்திலா வது சற்று அமைதி பெறட்டும் என்று தாய் தன் குழந்தையை மடியில் வைத்துக் கொள்வதுபோல், தன் மணி வயிற்றினுள் வைத்துக் கொண்டு ஆடாமல் அசையாமல் பைய ஆலின் இலை யின் மேல் உறங்குகின்றான். அது யோகத் துயில்; அறிதுயில். இனிமேல் உலகத்திலுள்ள உயிர்களுக்கு எப்படி அருள் செய்வது என்று யோசித்துக் கொண்டு தூங்குகிறான். அவன் கருக் கொண் டிருக்கிறான். உலகத்தில் உயிர்கள் பலபல பிறவி எடுத்துக் களைப்பை அடைகிறன. அதனதன் பிறப்பும் இறப்பும் ஊழ்வினை வெவ்வேறாக இருப்பதற்கு ஏற்ப அமையும். எல்லாரும் ஒருசேர அடங்குகிற நிலை ஊழிக்காலத்தில்தான். பிரளய காலத்தில் எல்லா உயிர்களும் மரிக்கின்றன. இந்த உயிர்கள் எல்லாம் இத்தனை நாள் துன்பப்பட்டுக் கொண்டிருந்தனவே; இப்போதா வது சற்று அமைதியாக, இன்பமாக இருக்கட்டும்' என்று அவை யாவற்றையும் உண்டு, தன் மணி வயிற்றுக்குள் வைத்துக் கொண்டு உறங்குகிறான். இப்படித் திருமாலை, "உய்ய வுலகுபடைத் துண்ட மணிவயிறா" என்று பெரியாழ்வார் பாடுகிறார். அதேபோல் அருணகிரி யார் இங்கே பாடுகிறார்; 299