பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 வேல், வெற்றிவேல் என்று சொல்வார்கள். அந்த வேல் உலகத் துக்குத் துன்பம் தருகின்ற அகங்கார மமகாரங்களின் வடிவாக விளங்கிய சூரனையும், அவனைச் சார்ந்த அசுரக் கூட்டங்களை யும் வென்றது. 'வேல்பட்டு அழிந்தது வேலையும் சூரனும் வெற்பும்" என்று முன்பே சொல்லியிருக்கிறார். சூரன் தனக்குக் கவசமாகத் கிரெளஞ்ச கிரியை வைத்திருந்தான். அது பொடியானவுடன் மாமரமாகக் கடலுக்குள் போய் ஒளிந்து கொண்டான். முருகன் தன் வேலினால் கடல் நீர் சுவறிப்போகும்படி செய்து சூரனைச் சங்காரம் பண்ணினான் என்கிற கதையை முன்பே பலமுறை கேட்டிருக்கிறோம். சூரன் முதலியோர் அழிவு நாம் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறோம். காரணம்: நம்மிடத்திலும சூரன் இருக்கிறான்; மலை இருக்கிறது; கடல் இருக்கிறது. அகங்காரமே சூரன். நான் என்ற அகங்காரமாகிய சூரனைச் சுற்றி, "எனது, எனது' என்னும் மமகாரக் குன்று இருக்கிறது. இந்த அகங்காரச் சூரன், கண்டுபிடிக்க முடியாமல் பிறவிக் கடலுக்குள் ஒளிந்து கொண்டிருக்கிறான். பிறவிக்கடல் வற்ற வேண்டுமானால் மமகாரம் போகவேண்டும். நான் என்பது தோன்றி எனது என்னும் புறப்பற்று விரிகின்றது. யான் என்கிற அகப்பற்றும், எனது என்கிற புறப்பற்றும் போய் விட்டால் பிறவிக் கடல் இல்லை. பிறவி போக எம்பெருமானின் திருக்கரத்திலுள்ள ஞானவேல் துணை வரவேண்டும். இதையே கந்தபுராணக் கதை புலப்படுத்துகிறது. ஆண்டவன் இருக்கும் கடல் கருணைக் கடல். சூரன் இருக்கும் கடல் பிறவிக் கடல். பிறவிக் கடல் கருணைக் கடலால் ஒழிய வேண்டும். பிறவிக் கடல் வற்றினால் சூரன் அழிந்து விடுவான். மாயையின் பிள்ளையாகிய சூரனையும், அவனுக்கு உறு துணையாக இருந்த மமகார மலையையும், அவன் ஒளிந்திருந்த கடலையும் வற்றச் செய்த பெருமை எம்பெருமான் திருக்கரத் திலுள்ள வேலுக்கு உண்டு. கடல், கிரெளஞ்ச கிரி, சூரன் ஆகிய 304