பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிகலங்கள் மூன்றும் அந்த வேலின் நுனியில் குத்திக் கொண்டிருக்கின்றன. இந்த மூன்று பொருளும் வேலுக்கு அலங்காரமாக உள்ளனவாம். ஆலுக் கணிகலம் வெண்டலை மாலை; அகிலம்உண்ட மாலுக் கணிகலம் தண்ணந் துழாய், மயில் ஏறும் ஐயன் காலுக் கணிகலம் வானோர் முடியும் கடம்பும்கையில் வேலுக் கணிகலம் வேலையும் சூரனும் மேருவுமே. (ஆலமரத்தினடியில் உள்ள சிவபெருமானுக்கு ஆபரணமாக இருப் பது வெள்ளிய தலை மாலை; உலகத்தை உண்ட திருமாலுக்கு ஆபரண மாக இருப்பது குளிர்ச்சியையும் அழகையும் உடைய துழாய் மாலை; மயிலின்மேல் ஏறும் முருகனுடைய திருவடிக்கு ஆபரணமாக இருப்பவை தேவர்களின் தலைகளும் கடம்ப மலர்களும்; அவன் திருக்கரத்திலுள்ள வேலாயுதத்துக்கு ஆபரணம் கடலும் சூரனும் மலையும். ஆல்; ஆகுபெயர். வெண்டலைமாலை - எலும்பாக உள்ள தலை மாலை. வேலை - கடல். மேரு என்றது பொன்மலையாகிய மேருவைக் குறிக்காமல் பொதுவன்கயில் பெரிய மலையைக் குறித்தது). 3O5