பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோதனையும் சாதனையும் என்னிடத்தில் இல்லை. ஆனால் அத்தகைய இன்ப நலம் விளைந்ததே; அது கண்டு எனக்கே ஆச்சரியம் உண்டாகிறது. இந்த இன்பம் விளைந்ததற்குக் காரணம் வேண்டும். அந்தக் காரணம் என் தகுதி அன்று. எம் பெருமான் திருவருள்தான் காரணம் என்ற வியப்புணர்ச்சி உண்டாகும். அத்தகைய அநுபவ அதிசயப் பெருக்கிலே அருணகிரியார் பாடுகிற பாடல்களில் ஒன்று இப்பொழுது பார்க்கப் போவது. பாதித் திருவுருப் பச்சென் றவர்க்குத்தன் பாவனையைப் போதித்த நாதனைப் போர்வே லனைச்சென்று போற்றிஉய்யச் சோதித்த மெய்யன்பு பொய்யோ? அழுது தொழுதுருகிச் சாதித்த புத்திவந் தெங்கே எனக்கிங்ங்ண் சந்தித்ததே! மெய்யும் போலியும் ஒரு வீட்டில் அண்ணன் தம்பி இரண்டுபேரும் பரீட்சைக்குப் படிக்கிறார்கள். எப்போது பார்த்தாலும் இரண்டு பேரும் புத்தகத்தை வைத்துக் கொண்டிருப்பதைத் தந்தை பார்க்கிறார். தம்பிக்கு நூற்றுக்கு எண்பது மார்க்கு எல்லாப் பாடங்களிலும் வருகிறது. அவன் சிறப்பாகத் தேர்ச்சி பெறுகிறான். அண்ணன் தேறவில்லை. "நானுந்தான் எப்போது பார்த்தாலும் படித்துக் கொண் டிருந்தேன். விளையாடப் போகவில்லை. எனக்கு என்னவோ வாத்தியார் மார்க்குப் போடவில்லை' என்று அண்ணன் குறை கூறினால் அதை அவன் தந்தை நம்புவாரா? நீ எப்போது பார்த் தாலும் புத்தகத்தை வைத்துக் கொண்டிருப்பது போலப் பாவனை செய்திருக்கிறாய். புத்தகத்திற்குள் எந்த நாவலை வைத்துப் படித்துக் கொண்டிருந்தாயோ? உண்மையாகப் படித்திருந்தால் உனக்கு ஏன் மார்க்கு வராமல் போகிறது?'என்று திட்டுவார். தம்பி உண்மையாகவே படித்திருக்கிறான். அண்ணன், தம்பியைப் போல எப்போதும் புத்தகமும் கையுமாக இருந்தாலும் படிப்ப வனைப் போல பாசாங்கு செய்திருக்கிறான். மெய்யான படிப்பு, போலியான படிப்பு இரண்டுக்கும் உள்ள வேறுபாடு பரீட்சை முடிவில் தெரிந்து போகிறது. 307