பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 நாம் கோயிலுக்குப் போகிறோம். நம்முடைய துன்பங்கள் யாவும் போகவேண்டுமென்று இறைவனை வணங்கி வரு கிறோம். ஆண்டவனிடத்தில் அன்பு இருந்தால் நமக்கு இவ்வுலகு வாழ்வில் உடம்பைச் சார்ந்த துன்பமும் வராது; மனத்தைச் சார்ந்த துன்பமும் வாராது. "முடியாப் பிறவிக் கடலில் புகார்முழு துங்கெடுக்கும் மிடியால் படியில் விதனப்படார்” என்று அருணகிரியார் சொல்கிறார். அவரைப் போன்ற அநுபூதி மான்களாகிய மற்றவர்களும் அப்படியே சொல்லி இருக்கிறார்கள். 'நானும் இறைவனை நம்பி வாழ்கிறேன். என்னுடைய துன்பம் தீருவதாய் இல்லையே! நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டல்லவா இருக்கிறது? என்று நாம் எப்போது பார்த்தாலும் அழுது புலம்பி நைந்து கொண்டிருக்கிறோம். இதனால் சிலருக்கு, அருணகிரி யாரைப் போன்றவர்கள் பொய்யாக அப்படிச் சொல்லிச் சென்றார் களோ என்று நினைக்கத் தோன்றுகிறது. ஒருசமயம் இல்லா விட்டாலும் மற்றொரு சமயம் அவர்களுடைய வாக்கில் ஐயம் உண்டாகிறது. மெத்தப் படித்தவர்களுக்குக்கூட இந்த ஐயம் எழுவதுண்டு. ஆண்டவனிடத்தில் அன்பு செய்து வாழ்பவர்களாக நாம் இருந்தாலும் நம்முடைய அன்பில் போலி அன்பும் இருக்கிறது; மெய்யான அன்பும் உண்டு. பரீட்சையில் உண்மையான படிப்பையும், பாசாங்குப் படிப்பையும் பயனைக் கொண்டு கண்டாற் போல, இறைவனைத் தொழுபவர்களுக்கு உண்டாகிற அநுபவத்தைக் கொண்டே உண்மையான அன்பையும், போலி அன்பை யும் கண்டு கொள்ளலாம். மூன்று வகை அன்பு இரவில் எல்லோரும் தூங்குகிறார்கள். பகல் எல்லாம் உழைத்துவிட்டுச் சிலர் உடல் மறந்து தூங்குகிறார்கள்; எத்தனை சத்தம் ஏற்பட்டாலும் அவர்கள் காதில் விழுவது இல்லை; தூக்கம் கலைவதும் இல்லை. சில செல்வர்கள் தூங்கிக் கொண்டே இருப்பார்கள், பூனை ஓடினாலும் பொசுக்கென்று விழித்துக் கொள்வார்கள். சிலர் தூங்குவது போலப் பாசாங்கு செய்வார்கள்: தூங்கவே மாட்டார்கள். - зов