பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோதனையும் சாதனையும் இப்படி, தூக்கங்களில் ஆழ்ந்த தூக்கம் இருக்கிறது; சிறிது சத்தம் ஏற்பட்டாலும் குலைந்துவிடுகிற கோழித் தூக்கம் இருக் கிறது; தூங்குவது போன்ற பாசாங்குத் தூக்கமும் இருக்கிறது. அன்பிலும் மூன்று வகை உண்டு. பிறர் பாராட்ட வேண்டு மென்பதற்காகத் திருநீறு அணிந்து சைவப் பழம்போலத் தினந் தோறும் ஆலயத்திற்குப் போவாரும் உண்டு. அடியார்கள் போல உருகி உருகி இவர்கள் ஆலயத்தில் சொல்கிற துதிகள் எல்லாம் ஆண்டவனிடத்தில் வைக்கிற போலிப் பக்தியின் விளைவு. இவர்கள் பொய் தூக்கம் தூங்குகிற சாதியினரைச் சேர்ந்தவர்கள். இவர்களுடைய அன்பு பொய்யான அன்பு. சிலர் உண்மை யிலேயே இறைவனிடத்தில் பக்தி செய்து வாழ்வார்கள். ஆனால் ஏதாவது சின்னத் துன்பம் வந்துவிட்டாலும் அவர்களுடைய அன்பு தளர்ந்துவிடும். 'ஆண்டவனைத் தொழத்தொழத்தான் இந்தத் துன்பங்கள் எல்லாம் வருகின்றன. கடவுளுமாச்சு, கத்தரிக் காயுமாச்சு' என்று காரணமின்றிச் சினந்து இறைவனிடத்தில் பக்தி செய்வதில் தளர்ந்துவிடுவார்கள். தூங்கும்போது சிறிது ஓசை கேட்டாலும் விழித்துக் கொள்கிற சாதியினரைச் சேர்ந்தவர்கள் அவர்கள். அவர்கள் ஆழமில்லாத அன்பு உடையவர்கள். எத்தனை துன்பம் வந்தாலும் இன்பம் வந்தாலும் தளர்ச்சியோ செருக்கோ அடையாமல் சிலர் ஆண்டவனிடத்தில் இடையறாத அன்பு செய்து வாழ்வார்கள். இவர்கள் தம் உடலை மறந்து தூங்கும் சாதியிரைச் சேர்ந்தவர்கள். இவர்களுடைய அன்புதான் சோதித்த மெய்யன்பு. - சோதனை செய்தல் நாம் எத்தகைய பொருள் வாங்கினாலும் வாங்குவதற்கு முன்னால் அதனைச் சோதித்து வாங்குகிறோம். கார் வாங்கு வதாய் இருந்தால் அதனுடைய எல்லாப் பாகங்களும் கொஞ்ச மேனும் குலையாமல் இருக்கின்றனவா என்று நன்றாகச் சோதனை செய்து பார்த்து வாங்குகிறோம். எது எது நம்முடைய முயற்சியினால் பெறப்படுகிறதோ அதைச் சோதனை பண்ணுகிறோம். சோதனை பண்ணுகிற இந்த வழக்கம் பெரியவர்களுக்கு உண்டு. மகாத்மா காந்தி போன்றவர்கள் எப்போதும் ஆத்ம சோதனை பண்ணிக் கொண்டிருந்தார்கள். அவர் தம் வாழ்க்கை 303