பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோதனையும் சாதனையும் என்பதைச் சோதித்துப் பார்க்கவே என்னை அடிக்கச் சொன்னேன். எனக்கு இன்னும் அந்தப் பக்குவம் வரவில்லையே! நீ என்னை அடித்தபோது ஐயோ என்று கத்திக் கொண்டல்லவா எழுந்திருந் தேன் நெஞ்சம் திடுக்கிடும் போது இந்தப் பாவிக்கு இறைவன் நினைவு வரவில்லையே! என்னை இன்னும் நன்றாக அடியப்பா' என்றாராம். தம்முடைய அன்பு மெய்யான அன்பா என்பதை அவரே இப்படிச் சோதித்துப் பார்த்துக் கொண்டார். பஜனையும் பாம்பும் ஒரு பஜனை மண்டபம். அங்கே திருப்புகழ் பாடிக் கொண் டிருக்கிறார்கள். தம்மை மறந்து உணர்ச்சி வசப்பட்டு எல்லாரும் பாடிக் கொண்டிருக்கும்போது யாரோ ஒருவன் பாம்பு பாம்பு என்று கத்தினான். அவ்வளவுதான். அங்கிருந்த அத்தனை பேரும் ஒட ஆரம்பித்துவிட்டார்கள். நெடுந்துாரம் ஒடின பிறகுதான், "ஐயோ! நம்முடைய அன்பை இந்தச் சிறு பையன் பாம்பு பாம்பு என்று பொய்யாகக் கத்திச் சோதித்துவிட்டானே பாம்பு என்ற வுடன் நாமும் பயந்து ஓடி வந்தோமே!” என யாவரும் வெட்கப் பட்டார்களாம். அவர்களுடைய அன்பு, பய உணர்ச்சி எழுந்த போது தளர்ந்துவிட்டது. கூண்டோடு கைலாசம் ஒரு பல சரக்குக் கடைச் செட்டியார்: அவர்தாம் அந்த ஊரில் இருந்த ஆலயத்தின் தர்மகர்த்தா. இரவு பத்துமணி வரைக்கும் வியாபாரம் கடையில் நடக்கும். பத்து மணிக்குமேல் கடையைப் பூட்டிக் கொண்டு யாருமே இல்லாத வேளையில் கோயிலுக்கு வருவார். தினந்தோறும் அவர் வரும் வரையிலும் குருக்கள் ஆலயத்தைத் திறந்து வைத்துக் கொண்டு இருக்க வேண்டும். அவருக்குத் தூக்கம் தூக்கமாக வரும். இருந்தாலும், தர்மகர்த்தா வுக்குத் தரிசனம் செய்து வைக்க வேண்டுமே என்று கொட்டாவி விட்டுக் கொண்டு இருப்பார். செட்டியார் கோயிலுக்கு வந்து ஆண்டவனைத் தரிசனம் செய்வார். செய்யும்போது, எம்பெருமானே! என்னைக் கூண் டோடு கைலாசம் சேர்த்துக் கொள்ளமாட்டாயா?" என்று இரு கைகளையும் சேர்த்துக் குவித்துக் கொண்டு பிரார்த்திப்பார். இதை க.சொ.1V-21 311