பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோதனையும் சாதனையும் போக வேண்டும்? அவருடைய அன்பு போலி அன்பு என்பதை அந்தச் சிறிய சோதனை வெளிப்படுத்திவிட்டது. அப்படியே, கோயிலுக்கு எல்லாரும் போகிறார்கள் என்றா லும் சிலருடைய அன்பு போலி அன்பாக இருக்கிறது. சில ருடைய அன்பு மெய்யானதுதான் என்றாலும் பயம், கோபம், துக்கம் மகிழ்ச்சி முதலிய உணர்ச்சிகள் மிகும் போது தளர்ந்து போகும் அன்பாகி விடுகிறது. மிகச் சிலருடைய அன்புதான் சோதித்த மெய்யன்பாக இருக்கிறது. வாங்குகிற பழத்தைச் சோதனை பண்ணிப் பார்க்கிற நாம் ஆண்டவனிடத்தில் அன்பு கொள்ளும்போது அது மெய்யான அன்பா, தளர்ந்து விடாத அன்பா என்று சோதித்துப் பார்த்துக் கொள்ள வேண்டும். சுந்தரர் இயல்பு திருவொற்றியூரை விட்டு திருவாரூருக்குக் கிளம்பியவுடன் கண்ணை இழந்துவிட்ட சுந்தரமூர்த்தி சுவாமிகள், "ஐயோ கண் போய்விட்டதே!' என்று அழவில்லை. மேடு பள்ளங்களில் தடுக்கித் தடுமாறி விழுந்தபோதும் ஐயோ என்று அழவில்லை; 'நமச்சிவாயா, நமச்சிவாயா என்று கதறினார். "வழுக்கி வீழினும் திருப்பெயர் அல்லால் மற்று நான்அறியேன்மறு மாற்றம்" என்று பாடினார். அவருடைய அன்பு சோதித்த போதும் தளர்ந்துவிடாது நின்ற மெய்யன்பு. அமைதியாக இருக்கும்போது நாம் இறைவனை நினைக் கிறோம். திருடன் வந்துவிட்டால், 'ஐயோ ஐயோ' என்று அலறுகிறோம். கோபம் வந்துவிட்டால் இறைவன் நாமம் நமக்கு மறந்து போகிறது; கண்டபடி பேச ஆரம்பித்துவிடுகிறோம். அப்படிப் பலவகையான உணர்ச்சிகள் மீதுர்ந்து எழும்போதும், உணர்ச்சி விஞ்சும்போதும் நாம் இறைவனை மறக்காமல், நம் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் சொற்களாக 'முருகா முருகா என்று சொல்ல ஆரம்பித்துவிட்டால் நம்முடைய பக்தி உறுதி பெற்றதென்று நம்பலாம். சோதித்த மெய்யன்பு நிலைத்து நிற்கும் போது இறைவன் திருவருளைப் பெறலாம். 313