பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோதனையும் சாதனையும் சோதித்த மெய்யன்பு “இத்தகைய சோதித்த மெய்யன்பினால் அல்லவா நீ உறை நின்ற இடங்களுக்கு எல்லாம் சென்று, உன்னைப் போற்றி உன் னால் நான் உய்வு பெற்றிருக்கிறேன்? பலவிதமான சோதனை தளுக்கு உட்பட்டும் தளராது இருக்கும் என் மெய்யன்பு பொய்யோ? அல்ல" என்று அருணகிரியார் பேசுகின்றார். பாதித் திருவுருப் பச்சென் றவர்க்குத்தன் பாவனையைப் போதித்த நாதனைப் போர்வே லனைச்சென்று போற்றி உய்யச் சோதித்த மெய்யன்பு பொய்யோ? "நான் அன்புகொண்டேன்; அவன் உறைகின்ற தலங்களுக்கு எல்லாம் சென்றேன். அவன் இருக்கும் இடம்நாடிச் செல்வதற்கு அன்பு இருந்தது. அந்த அன்பு முறுக முறுக அதுவே மெய்யன்பு ஆயிற்று. மெய்யன்பு உண்டான உடனே அவன் இருக்கும் இடங்களுக்குச் சென்று அவனைப் போற்றினேன். என்னுடைய மெய்யன்பு உறுதியானதுதானா, சோதனைக் காலங்களில் நழுவாது இருக்குமா என்று சோதித்துப் பார்த்தேன். அப்படிச் சோதனை செய்ததில் என் மெய்யான அன்பு வென்றது; நான் உய்ந்தேன். சோதித்த மெய்யன்பினாலே நான் சென்று போற்றி உய்ந்தேன்." சென்று போற்றி உய்யச் சோதித்த மெய்யன்பு. சென்றது முதல் முயற்சி. அதற்கு அன்பு காரணம். ஆலயத் திற்கு எல்லாரும் போகிறார்கள். என்றாலும் ஆண்டவன் சந்நி தானத்திலே நின்று அவனைப் போற்றித் தோத்திரம் செய்கிறார்கள் என்று சொல்ல முடியுமா? சினிமாக்கொட்டகையின் வாயிலில் நின்று வேடிக்கை பார்த்து விட்டு வருபவர்களைப் போல, சங்கீதக் கச்சேரிக்குச் சென்றுவிட்டு வருபவர்களைப் போல, பலர் வந்துவிடுகிறார்கள். அன்பு இருந்தால் ஆலயத்திற்குச் செல்லலாம். ஆண்டவன் சந்நிதானத்திலே மனம் ஒருமைப்பட்டு நின்று, உருகி அவன் பெருமைகளைச் சொல்லிப் போற்ற வேண்டு மானால் இறைவனிடத்தில் கொண்ட அன்பு மெய்யாக இருக்க வேண்டும். மெய்யன்பு உண்டானால்தான் ஆண்டவனுடைய சந்நிதானத்திற்குச் சென்று அவனைப் போற்ற முடியும். முதலில் ஆலயத்திற்குப் போகிற வழக்கம் உண்டாக வேண்டும். இந்தப் 315