பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோதனையும் சாதனையும் தலை தருக்கிச் சென்றான். முருகனுக்குக் கோபம் வந்துவிட்டது. "பிரமாவைப் பிடித்து வா' என்றான். பிரமன் எதிரே வந்து நின்ற போது, 'நீ யார்?' என்று கேட்டான், "நான் பிரமன்.' 'உன் தொழில் என்ன?” 'உலகத்தைச் சிருஷ்டி பண்ணுகிறேன்." "என்ன படித்திருக்கிறாய்?" 'எனக்கு வேதம் நன்றாக வரும்.' "வேதம் தெரியுமா? எங்கே சொல் பார்ப்போம்.' பிரமன் வேதம் சொல்வதற்கு முன், 'ஓம்' என்று ஆரம்பித் தான். < 'நிறுத்து. ஓம் என்று சொன்னாயே; அதன் பொருள் என்ன?” என்று கேட்டான் இளம்பூரணன். - பிரமனுக்குச் சொல்லத் தெரியவில்லை; விழித்தான். --- 'முதல் எழுத்துக்கே பொருள் தெரியவில்லையே! உனக்கு வேதம் வருமென்கிறாயே! உன் லட்சணம் இப்படி இருக்கும் போது நீ கடமையை எப்படிச் செய்யப் போகிறாய்?" என்று அவன் தலையில் ஓங்கி ஒரு குட்டுக் குட்டிவிட்டு அவனைப் பிடித்துச் சிறையில் போட்டான். அன்று முதல் முருகனே படைக்கும் தொழிலை மேற்கொண்டான். இந்தச் செய்தி பரமேசுவரருக்குத் தெரிந்தது. அவர் தம் குலங்தையைக் கூப்பிட்டு அனுப்பினார். 'பிரமாவைச் சிறையில் போட்டுவிட்டாயாமே குழந்தை?" என்று கேட்டார். - “ஆம் அப்பா அவனுக்கு ஒம் என்பதற்குப் பொருள் தெரிய வில்லை' என்ற சொன்னான் முருகன். "அப்படியா? உனக்கு அதன் பொருள் தெரியுமா?" என்று கேட்டார் பரமேசுவரர். தம்முடைய பிள்ளை என்கிற பாவனை யோடு கேட்டார். "தெரியும் என்றான். "எங்கே, சொல் பார்க்கலாம்.' 3.49