பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோதனையும் சாதனையும் 'அர்த்தநாரீசுவரப் பெருமானுக்குத் தன்னைக் குழந்தையாகப் பாவிக்கும் பாவனையை மாற்றிக் குருநாதனாகப் பாவிக்கும் பாவனையைப் போதித்த நாதனை, தந்தைக்கு ஞானம் சொன்ன குருமூர்த்தி என்று உலகம் எல்லாம் தெரிந்து கொள்வதற்காக ஞான சக்தியையே, அஞ்ஞானத்தோடு சண்டையிட்டு ஒறுக்கும் போர்வேலையே, தன்னுடைய திருகரத்தில் ஏந்திக் கொண்டி ருக்கும் பொருமானை நாடிச் சென்று, கையைக் குவித்து வணங்கிப் போற்றி, பிரபஞ்சச் சேற்றைக் கழித்து நான் உய்வ தற்கு, சோதித்த மெய்யன்பு எனக்குத் துணை செய்ததே! அன்பு கொண்டு அங்கே சென்றேன். மெய்யான அன்பு இருந்தது; போற்றினேன். சோதித்த மெய்யன்பு இருந்தது; உய்ந்தேன். இது நான் என் அநுபவத்திலே கண்டது. இது பொய்யாகுமா? உண்மை அல்லவா?’ என்று கேட்கிறார் அருணகிரியாராகிய குருநாதர். துன்பம் இல்லாத வரைக்கும் முருகா என்று சொல்லத் தோன்றும். காமம் இல்லாத வரைக்கும் முருகா என்று சொல்லத் தோன்றும். "ஞானத்திற்கு நேர்விரோதமான உணர்ச்சி எனக்கு மூண்ட காலத்திலும் முருகனை நினைக்கிறேன்" என்று அருண கிரியார் பாடியிருக்கிறார். 'கண்டுண்ட சொல்லியர் மெல்லியர் காமக் கலவிக்கள்ளை மொண்டுண்டு அயர்கினும் வேல்மறவேன்" என்பது அவர் வாக்கு அவன் திருக்கரத்திலுள்ள வேலை நான் மறக்காதிருக்கும்படி அருள் செய்தான். என்னுடைய அன்பை நான் பலவகையிலும் சோதித்துப் பார்த்தேன். எல்லாச் சோதனை களிலும் அது வென்றுவிட்டது. அதனால் அல்லவா நான் உய்ந்தேன் சோதித்த என்னுடைய மெய்யன்பு பொய்யாகி விடுமா? ...போர்வேலனைச் சென்று போற்றிஉய்யச் சோதித்த மெய்யன்பு பொய்யோ? அழுது தொழுது உருகுதல் அன்பு என்பது ஒர் உணர்ச்சி; அது கண்ணுக்குப் புலனாகாது. அதற்குச் சில அடையாளங்கள் உண்டு. அன்புடையாரிடம் வெளிபாடையாக நிகழ்வன சில. வெளிக்குத் தெரியாமல் உள்ளே நிகழ்வன சில. வெளிப்படையாக ஆண்டவனுடைய சந்நிதானத்திற்குச் சென்று போற்றினால் போதுமா? அப்படிச் 321